(ஜெ.ஜெய்ஷிகன்)
பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் மற்றும் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி . நிருபா பிருந்தன் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் முதியோர் தினத்தை முன்னிட்டு இவ் ஆன்மீகச் சுற்றுப் பயணம் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.
இவ் ஆன்மீகப் பயணத்தில் சமூகசேவை உத்தியோகத்தர் அ.நஜீம், அபிவிருத்தி உத்தியோகத்தர் க.ஜெகதீஸ்வரன், கிராமசேவை உத்தியோகத்தர் குணபாலன், முதியோர் சம்மேளனத் தலைவர். க.நடேசன் உள்ளிட்ட குழு இப் பயணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது.
02 பேரூந்துகளில் அழைத்துச் செல்லப்பட்ட இப் பயணம், பிரதேச செயலக ஆலயத்திற்கு முன்பாக ஆரம்பமானது. பின்னர் வெருகலம்பதி ஆலயம், லக்ஸ்மி நாராயணன் கோயில், கன்னியா சுடுதண்ணீர்க் கிணறு, திருமலை தேவாலயம், கோணேஸ்வரர் ஆலயம், மாபிள் பீச் போன்ற இடங்களுக்கு சென்றிருந்தனர். முதியோர்களுக்கான இப் பயணத்தில் முதியோர்களின் உண்மையான சந்தோசத்தை அவர்களின் முகங்களில் காணக் கூடியதாக இருந்தது.
வீடே கதி என்றிருந்த அவர்களுக்கு இப் பயணம் பெருத்த நின்மதியையும் ஆறுதலையும் தருவதாக முதியோர் பேச்சுவாக்கில் தன் கருத்தை என்னிடம் பதிவு செய்தார்.
இன்றெல்லாம் இளசுகளே முன்னுக்கு வந்து பாட்டு பாடத் தயங்குகிற காலகட்டத்தில் முதியோர்களின் ரசனையும் பழைய பாடல்களும், ஏட்டிக்குப் போட்டியான பாட்டுக்களும் அவர்களை இன்னொரு உலகிற்கு சென்றுவந்த அனுபவத்தைக் கொடுத்திருக்கிறது.