கல்குடா கல்வி வலய பாடசாலையில் மாணவர் பாராளுமன்ற அமர்வு - படங்கள்

மட்டக்களப்பு, கல்குடா கல்வி வலயத்திலுள்ள கோரகல்லிமடு ஶ்ரீ ரமண மகரிஷி வித்தியாலயத்தில் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கமைவாக 14.10.2016ஆம் திகதியன்று மாணவர் பாராளுமன்ற அமர்வு இடம்பெற்றது.

இப் பாடசாலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மாணவர்களுக்கான பாராளுமன்ற தேர்தல் இடம்பெற்று, அது விடயமான செயற்பாட்டு முறைகளைத் தொடர்ந்து இன்றைய தினம் இப் பாராளுமன்ற அமர்வு இடம்பெற்றது.
இக் கல்விச் செயற்பாட்டில் கோரகல்லிமடு ஶ்ரீ ரமண மகரிஷி வித்தியாலய அதிபர் என்.ஆனந்தன் மற்றும் பாடத்துறைசார் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.

1948 இல் இதேபோன்றதொரு ( இதேநாளில்) தினத்தில்தான் இலங்கையில் முதன் முதலாக பாராளுமன்றம் கூடியது எனும் தகவலை இதன்போது குறிப்பிடலாம்.