Battle of Batti கிரிக்கெட் சுற்றுப் போட்­டியில் கோட்டைமுனை விளையாட்டுக் கழகம் வெற்றிக்கிண்ணத்தை பெற்றது!

( சதீஸ்)
மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டுக் கழகத்தினால் 10வது வருடமாக நடாத்தப்பட்ட Battle of Batti கிரிக்கெட் சுற்றுப் போட்­டியில்      கோட்டைமுனை விளையாட்டுக் கழக அணி சம்பியனாகியுள்ளது.

கோட்டமுனை விளையாட்டு கழக தலைவர் டி.தர்மேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இப் போட்டி, மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலய மைதானத்தில் கடந்த 15ஆம் திகதி ஆரம்பமானகி அதன்   இறுதிப் போட்டி 16ஆம் திகதி நடைபெற்றது. 

முதல் நாள் சனிக்கிழமை  நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிவானந்தா விளையாட்டு கழகம்  130  . ஓட்டங்களை பெற்றுக்கொண்டது . பதிலுக்குதுடுப்பெடுத்தாடிய கோட்டமுனை விளையாட்டு கழகம்   131  . ஓட்டங்களை பெற்று கோட்டமுனை விளையாட்டு கழகம் வெற்றி பெற்றது .


2ம் நாள் இறுதிப் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய சிவானந்தா விளையாட்டுக் கழக அணியினர் 50 ஓவர் முடிவில் 10 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கோட்டைமுனை விளையாட்டுக் கழக அணியினர் 46வது ஓவரில் 7 விக்கெட்களை இழந்து 193 ஓட்டங்களைப் பெற்று இவ்வருடம் சம்பியனாகியது.

கடந்த 10 வருடங்களாக Battle of Batti எனும் கிரிக்கெட் சுற்றுப் போட்டி கோட்டைமுனை விளையாட்டுக் கழகத்தினால்  இரு கழகங்களுக்கிடையே நட்புறவை வளர்க்கும் நோக்குடன் நடாத்தப்பட்டுவருவதாக போட்டி ஏற்பாட்டாளர்களால் தெரிவிக்கப்பட்டது.

இப் போட்டியின் பரிசு வழங்கும் நிகழ்வில், கிழக்கு மாகாணசபை பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கொட் சம்மேளனத் தலைவர் எஸ்.ரஞ்சன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வெற்றியாளர்களுக்கு வெற்றிக்கிண்ணங்களை வழங்கிவைத்தனர்.