சபையின் பணிப்பாளர் சந்தன விஜேயரத்ன தலைமையில் நடைபெற்ற இவ் சுற்றுலாத்துறை நடமாடும் சேவையின் ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ளஸ் கலந்து கொண்டார்.
இவ் நடமாடும் சேவையில், சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களைப் பதிவு செய்தல், பதிவுகளைப் புதுப்பித்தல், பதிவு தொடர்பான ஆலோசனைகள் வழங்கல் உள்ளிட்ட பல்வேறு விடங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அத்துடன் சுற்றுலாத்துறை தொடர்பான பயிற்சிகளும் இன்று 20 அம் திகதி முதல் 22ஆம்திகதி வரை மேற்கொள்ளப்படவுள்ளன.
சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனத்தின் அனுசரணையுடன் நடைபெறும் இவ் நடமாடும் சேவையில் இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகாரசபையின் பதிவு தரநிர்ணய ஆளணியினர் 3 நாட்களும் இங்கு தங்கியிருந்து பதிவு தொடர்பான வேலைகளில் ஈடுபடுவதுடன், நேரடியான கள விஜயங்களையும் மேற்கொண்டு பதிவுகள் மேற்கொள்ளவுள்ளதுடன், குறைபாடுகள், திருத்தப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பிலான ஆலோசனைகளையும் சுற்றுலா நிறுவனங்களுக்கு வழங்குவர்.
இந்த நடமாடும் சேவையில், சுற்றுலா விடுதிகள், நிறுவனங்களைப் பதிவு செய்வதன் அவசியம், இணைய வழி சந்தைப்படுத்தல், சத்துளள உணவுகளைத் தயாரித்தல், நிதி வளங்களை ஏற்படுத்துதலுக்கான வாய்ப்புக்கள், சுற்றுலாக்கற்கை நிலையத்தின் முக்கியத்துவம், விடுதி களுக்கு அதனால் ஏற்படும் பயன்கள் உள்ளிட்ட பல்வேறு விடங்களுக்கு விளக்கங்களும் வழங்கப்படவுள்ளன.
அதே நேரத்தில் சுற்றுலா வசதிப்படுத்துனர்களுக்கான வகுப்புகள் நடைபெறுவதுடன்,இறுதிநாளன்று பரீட்சைகளும் நடத்தப்படும்.
அத்துடன், கடந்த மே மாதத்தில் பாசிக்குடாவில் நடைபெற்ற சுற்றுலாத்துறை வசதிப்படுத்துனர்களுக்கான பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கான அடையாள அட்டைகள் இன்றைய தினம் அரசாங்க அதிபரால் வழங்கப்பட்டதுடன், சுற்றுலா விடுதிகளுக்கான ஆனுமதிப்பத்திரங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
மட்டக்களப்பினைப் பெறுத்தவரையில் உல்லாசப் பயணத்துறை நட்சத்திர விடுதிகள் பாசிக்குடாவிலும் ஏனைய பிரதேசங்களில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான சுற்றுலா சஸ்ரீவிடுதுpகளுமு; இயங்கி வருகின்றன. இவற்றில் பாசிக்குடா பிரதேசத்தில் 14 நட்சத்திர விடுதிகளும் 25 சிறிய நடுத்தர விடுதிகளும் உள்ளன. அதே போன்று 50க்கு மேற்பட்ட சற்றுலா விடுதிகள் மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்களில் உள்ளன.
இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகாரசபையின் இது போன்ற நடமாடும் சேவை இவ்வருட ஆரம்பத்தில பாசிக்குடாவில் சர்வதேச நிதிக் கூட்டுத் தாபனத்தின் அனுசரணையில் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.