மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவின் கரடியனாறு கற்பானைக்குள கிராம நீர்வினியோகத் திட்டத்தின் குறைபாடுகளை ஆராய்ந்து உடனடியாக கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகத்தினை மேற்கொள்வதற்கு அரசாங்க அதிபர் உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
400 குடும்பங்களுக்கு குழாய்நீர் விநியோகங்களை வழங்கும் வகையில் 7 கோடி ரூபா செலவில் மேற்கொள்ளப்பட்ட ஏறவூர்பற்று பிரதேசசெயலாளர் பிரிவின் கரடியனாறு கற்பானைக்குளம் கிராமத்தின் குடிநீர் விநியோக வேலைத்திட்டம் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகிறது.
இவ்வேலைத்திட்டம் குறித்துபார்வையிட சென்ற மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினரது அறிக்கைக்கு அமைவாக அதிபர் நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளார்.
இத்திட்டத்தின் கீழ் கிணறுகள் அமைக்கப்பட்டு இரண்டு நீர்த்தாங்கிகளும் அமைக்கப்பட்டுள்ளன அத்துடன் வீடுகளுக்கான குடிநீர் விநியோகத்துக்கான இனணபபுகளும் வழங்கப்பட்டுள்ள போது குடிநீர் விநியோகம் வழங்கப்படாத நிலை காணப்படுவதால் களவிஜயத்தினை மேற்கொண்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் .
குறித்த ஒவ்வொரு தாங்கிகளும் 40 ஆயிரம் லீற்றர் கொள்ளளவு கொண்டவைகளாக மாகாண நீர்ப்பாசனத்திட்டத்தின் கீழ் உள்ளுராட்சி உதவி ஆணையபளர் அலுவலகத்தின் மேர்ப்பார்வையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படடிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்விடயம் தொடர்பாக உரிய அதிகாரிகளுடனான கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 05.10.2016 பிற்பகல் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.