
(கோபி)
கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேசசெயலகத்திற்குட்பட்ட பிரதேசத்திற்கான அனர்த்த முன்னாயத்த கூட்டமானது இன்று 03.10.2016 ஆம் திகதி காலை 10.30 மணியளவில் பிரதேச செயலாளர் எஸ்.ஆர்.ராகுலநாயகி தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
எதிர்காலத்தில் அனர்த்தங்கள் ஏற்படும் இடத்து மேற்கொள்ள வேண்டிய முன்னாயத்தங்கள் அனர்த்தநிலைமைகளினை குறைத்து கொள்வதற்கான முன்னாயத்தங்கள். அனர்த்தம் ஏற்படும் போது மேற்கொள்ள வேண்டிய உடனடி நடவடிக்கைகள் முகாம்கள் ஏற்படுத்தப்பட்டால் அவர்களுக்கான நலன்புரி வசதிகளினை ஏற்படுத்தல் போன்ற விடயங்களினை கூட்டுப் பொறுப்புடன் பிரதேசசெயலகத்தினை மையமாகக் கொண்டு இயங்குவதுடன் அனைத்து அரச, அரசசார்பற்ற மற்றும் கடற்படை மற்றும் இராணுவ, பொலிஸ் அதிகாரிகளை உள்ளடக்கி விரைவாக செயற்படும் நிலைமை தொடர்பில் கூட்டத்தில் ஆராயப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் திரு.இன்பராஜன், பிரதேசசெயலக உதவிதிட்டமிடல் பணிப்பாளர் ஆர்.கங்காதரன். மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவின் வெளிக்கள உத்தியோகத்தர் திரு.கசீர், 233 ஆம் படைப்பிரிவின் இராணுவ அதிகாரி வீ.கே.எஸ்.சமரசூரிய, கடற்படை அதிகாரி டீ.எம்.கே.திசநாயக்க, பிரதேசசெயலக அனர்த்த முகாமைத்துவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.கே.புவிதரன், வேள்ட் விசன் நிறுவன முகாமையாளர் பொனி வின்சன்ட், கே.பீ.என்.டி.யூ நிறுவன உத்தியோகத்தர், கிராம சேவை உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராமமட்ட அனர்த்த முகாமைத்துவ குழு எனபலரும் கலந்துகொண்டனர்.