இலங்­கையின் வறுமைக் கோடு

அண்­மையில் வெளியா­ன­தொரு ஊடக அறிக்கை தேசிய வறுமைக் கோடா­னது ஒரு மாதத்­திற்கு தலா­ வ­ரு­மானம் ரூபா 3500 லிருந்து ரூபா 5000 வரை உயர்த்­தப்­பட வேண்­டி­யி­ருக்­கி­றது என சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தது. இது வறுமை தொடர்பில் அக்­க­றை­யுடன் கவனம் செலுத்­து­வ­திலும் விரும்பி வர­வேற்­கத்­தக்க வகை­யிலும் அரசு ஒரு சமிக்­ஞை­யினைக் காட்­டு­கின்­றது. மேலும், இது பரந்த அள­வி­லான சமூக நலன்­புரி மற்றும் சமூக பாது­காப்பின் பரந்­த­ள­வி­லான சீர்­தி­ருத்­தங்கள் போன்­ற­வற்­றுடன் தொடர்­பு­ப­டு­கின்­றது. முன்­மொ­ழி­யப்­பட்ட மாற்­ற­மா­னது 6.8வீதத்திலிருந்து 22வீதம் வரை­யான வறு­மைக்­கோட்டின் கீழ் வாழ்­கின்­ற­வர்­களின் எண்­ணிக்­கை­யினை அதி­க­ரிக்கும். வறுமை கோட்டின் 63வீத அதி­க­ரிப்பு இலங்­கையில் எளிதில் நலி­வ­டை­யக்­கூ­டிய ஏழைகள் என்ற வகைப்­ப­டுத்­தலின் கீழ் வரு­ப­வர்­களில் 300வீத அதி­க­ரிப்பை ஏற்­ப­டுத்தும் என வலி­யு­றுத்­திக்­காட்­டு­கின்­றது.


ஆயினும், இந்த ரூபா 5500 எவ்­வாறு உருப்­பெற்­றது? என்­னென்ன உண­வுகள், உண­வு­களின் அளவு மற்றும் உண­வல்­லாத அடிப்­படை தேவைகள் கணிப்­பீட்­டுக்­காக எவை கருத்­திற்­கொள்­ளப்­பட்­டன. மேலும் அவை எவ்­வாறு விலை­யி­டப்­பட்­டி­ருக்­கின்­றன? அவ்­வா­றா­னவை முன்­னு­ரி­மைகள் மற்றும் விலை மாற்­றங்­க­ளுக்­கேற்­பவும், உணவு மற்றும் உண­வல்­லாத கூறுகள் குறிப்­பாக அடிப்­படை சேவைகள், நாட்டில் விடுக்­கப்­படும் பிர­தான சவால்கள் என்­ப­வற்­றிற்­கி­ணங்க யதார்த்­த­மா­னது மற்றும் உணர்­திறன் கொண்­டது என்­ப­தனை உறுதி செய்­கி­றது

அடிப்­ப­டையில் பிரச்­சி­னை­யா­னது வறி­யோரின் உண்­மை­யான தேவை­களை விட நடப்பில் உள்ள நுகர்வு மட்­டங்­களில் தங்­கி­யுள்­ளது. உதா­ர­ண­மாக, ஐந்து பேர் கொண்ட குறைந்த வரு­மானம் பெறும் ஒரு நகர்ப்­புற குடும்­ப­மா­னது போது­மான சுகா­தார வசதி, சுத்தம் மற்றும் பாது­காப்­பற்­ற­து­மான ஒரு அல்­லது இரு அறை­களின் வாட­கைக்கு பணத்தை செல­வி­டு­கின்­றனர். செல­வ­ழிக்கும் இப்­ப­ண­மானது அவர்­களின் உண்­மை­யான வசிப்­பி­டத்­தே­வையை பூர்த்தி செய்­கின்­றதா என்­ப­தற்­கான எந்த அடை­யா­ளமும் இல்லை.

நியா­ய­மான உயர் வளர்ச்சி வீதங்கள் மற்றும் அதி­க­ரிக்கும் தலா வரு­மானம் உண்­மையில் பெரும் எண்­ணிக்­கை­யி­லான வறி­ய­வர்கள் அல்­லது வறு­மை­யினால் பீடிக்­கப்­படக் கூடி­ய­வர்கள் தொகையை மறைக்க முனை­கின்­றது. நல்­ல­தொரு வாழ்­வூதியம் குறிப்­பாக தேசிய மட்­டத்தில் குறைந்த பட்ச ஊதியம் மாதாந்தம் ரூபா 10,000 மாக நிர்­ண­யிக்க திட்டம் என்­ப­தற்­கி­ணங்க யார் வறியோர் என்ற கேள்­வி­யா­னது முக்­கி­ய­மா­னது. இருப்­பினும், வறு­மையை பண­ரீ­தி­யான அல்­லது முழு­மை­யான அள­வீ­டு­க­ளுக்கு மட்­டுப்­ப­டுத்­து­வது போது­மா­ன­தல்ல, அது தவ­றாக இட்டுச் செல்­லப்­ப­டலாம். உதா­ர­ண­மாக, தர­வு­களின் படி அண்­மைய ஆண்­டு­களில் தோட்­டத்­து­றையில் வரு­மான வறுமை கணி­ச­மான அளவில் குறைந்­துள்­ள­தாக காட்­டப்­ப­டு­கின்­றது. ஆனால் இன்னும் பெரும்­பா­லான அம்­மக்கள் கல்வி, குடிநீர், சுகா­தார வச­திகள், மற்றும் போதிய வசிப்­பிட வச­தி­களை பெற்­றுக்­கொள்ளும் அடிப்­ப­டையில் கணி­ச­மான அளவில் பின்­தங்­கிய நிலை­யி­லேயே உள்­ளனர்.

எனவே, பல்­ப­ரி­மாண மற்றும் சார்­ப­ள­வி­லான வறுமை பற்­றிய அள­வீ­டுகள் வறு­மையை புரிந்­து­கொள்­வது மிக முக்­கி­ய­மா­க­வுள்­ளது. பொது சேவை­களின் விரி­வாக்கம் மூலம் சுகா­தாரம், கல்வி, குடிநீர் மற்றும் சுகா­தார மற்றும் பொது போக்­கு­வ­ரத்து போன்ற சேவைகள் கிடைக்கப் பெறு­வதை உறு­திப்­ப­டுத்தல் இன்­றி­ய­மை­யா­த­தாக உள்­ளது.

ஆனால், இலங்கை வெறும் கவர்ச்­சி­க­ர­மான பதி­வு­களை இவை தொடர்பில் கொண்­டி­ருப்­பினும் இச்­சே­வைகள் எப்­பொ­ழுதும் எல்­லோ­ராலும் சம­மாக பெற்­றுக்­கொள்ள முடி­யா­துள்­ளது. இது எப்­போதும் முழு­மை­யாக இல­வசம் என்­றில்லை பல்­வே­று­பட்ட மறை­மு­க­மான செல­வுகள் அங்கு மறைந்­துள்­ளன. நம்­ப­க­ர­மான தர­வுகள் வறுமை மதிப்­பீட்­டிற்கு மைய­மாக அமையும். அதா­வது ஒரு குறிப்­பிட்ட கால பல்­வகைத் தரவு கருத்­திற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது உதா­ர­ண­மாக ஒரே குடும்­பங்­களை நோக்கி பல ஆண்­டு­க­ளாக பல விஜ­யங்கள் மேற்­கொண்டு செய்­யப்­படும் நீண்ட கால ஆய்­வுகள் உள்­ளன. இது நாட்­பட்ட மற்றும் நிலை­யற்­ற­து­மான வறுமை நிலை­யினை அறிந்து கொள்­வ­தற்கு அவ­சி­ய­மாகும். மேலும் இது வறுமை ஒழிப்பு உத்­தி­களை மேம்­ப­டுத்­தவும் செய்­கி­றது.

வறுமைக் கோடா­னது பண­ரீ­தி­யான அள­வீ­டாக வெறும் எண்­களை விட உயர்­வாக உள்­ளது. அது, முக்­கி­ய­மான விளை­வு­களை உண்­டாக்கும் ஒரு நுழை­வா­யி­லாக திகழ்­கின்­றது. குறிப்­பாக சமூக பாது­காப்­புக்கு நிக­ரான திட்­டங்­களின் ஒரு தகு­தியை தீர்­மா­னிக்க பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. எல்லா விலக்­கல்­க­ளுக்கும் மேலாக வறி­ய­வ­ராக மாறக்­கூ­டி­ய­வர்கள் அவர்­க­ளது உத­வித்­தொ­கை­களை பெற்­றுக்­கொள்­வதில் நிறுத்­தப்­பட்­ட­வர்­க­ளாக இருப்­பது மிக முக்­கி­யமான விட­ய­மாகும்.

வறுமை மற்றும் சமத்­து­வ­மின்­மையை அள­விடும் கேள்­வி­களை துறைசார் நிபு­ணர்­க­ளிடம் விட்­டு­வி­டு­வது மிகவும் நன்­றாகும். ஏனெனில் இது ஒரு ஆரோக்­கி­ய­மான பொது விவா­தத்­திற்கு உத்­த­ர­வாதம் அளிக்­கின்­றது. இதன் பங்­குகள் மிக அதிகம் அத்­துடன் சமூக நலன்­புரி முறைமை மறு­சீ­ர­மைப்பு - அதா­வது சமுர்த்தி மற்றும் இதர விட­யங்கள் தொடர்பில் தொடரும் கலந்­து­ரை­யா­டல்கள் இந்த கேள்­விக்கு மேலும் வலுச்­சேர்க்­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

வறு­மை­யினை பற்றி சிந்­திக்கும் போது மரி­யா­தை, ­கண்­ணியம் தொடர்­பான கேள்­வி­க­ளுக்கு ற்­படும் அநீதி, நல்­வாழ்வு, அடிப்­படை உரித்­துக்­க­ளை, ­உ­ரி­மை­களை அணு­கக்­கூ­டிய நிலை, தொழில்­வாய்ப்பு மற்றும் வாழ்­வூதியம் தொடர்­பி­லான கேள்­வி­களை பரி­சீ­லித்து நிற்­கின்­றது. வறுமை எவ்­வாறு பற்­பல கசப்­பான அனு­ப­வங்­களை பாலின சர்ச்­சைகள், சாதி, வர்க்கம், இனம், இடம், வயது, இய­லுமை அல்­லது பேர­ழி­வு­களின் மோதல்­களின், யுத்­தத்தின் விளை­வாக தோற்­று­வித்­தது என்­பவை பற்­றியும் சிந்­திப்­ப­தாக உள்­ளது.

வறு­மை­யினை சமா­ளித்­தலின் வறு­மை­யுடன் போரா­டு­தலின் முதல் படி­யாக பிரச்­சி­னையின் ஆழ அகலம் தொடர்பில் கூடிய கவனம் செலுத்தல் வேண்டும். இதன் விளை­வாக வறுமைக் கோட்டின் மீதான உத்தேச மாற்றம் முக்கியமானதும் வரவேற்கத்தக்கதுமாகும். இன்றைய தேவையானது உறுதியான அபிவிருத்தியை நோக்கி செயற்படுதல் மற்றும் வறுமைக்கான மூல காரணங்கள், வறுமையை புரிந்து கொள்வதிலுள்ள சிக்கல் மிக்க தன்மை போன்றவற்றை அறிந்து கொள்ளல், அத்துடன் அதன் பாதிப்புக்கள் மற்றும் அவற்றுக்கு பதிலளிக்க பொருத்தமான திட்டங்களை வடிவமைத்தல் என்பவற்றை வேண்டி நிற்கின்றது. இதன் முக்கிய அங்கமாக பல்வேறு மட்ட அரச முகவர்கள், சுயாதீன நிபுணர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள், ஆலோசனைக்குழுக்கள், மிக முக்கியமாக வறுமையின் கீழ் வாழும் மக்கள் பிரிவினர்களுக்குமிடையே மிக நெருங்கிய பங்காண்மைத் தொடர்பை பேணுதல் இன்றியமையாதது.

வறுமை ஆராய்ச்சி நிலையம் (CEPA)