மட்டு.கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் 15வது வருட இரத்ததான முகாம்


மட்டக்களப்பு, கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் 15வது இரத்ததான முகாம் நிகழ்வு திங்கட்கிழமை(12ஆம் திகதி) மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் கழகத்தின் தலைவர் பி.சடாற்சரராஜா தலைமையில் இடம்பெற்றது.

கோட்டைமுனை விளையாட்டு கழகத்தினால் கடந்த 15வருடங்களாக தொடர்ச்சியாக இவ் இரத்ததானம் வழங்கும் நிகழ்வு நடாத்தப்பட்டு வருகின்றது.
விளையாட்டை மட்டும் நோக்காகக் கொண்டல்லாமல் ஏனைய சமுக சேவைப் பணிகளையும் தொடர்ந்து தமது கழகம் முன்னெடுத்துவருவதாக தலைவர் பி.சடாற்சரராஜா தெரிவித்தார்.

இவ் இரத்ததானம் வழங்கும் நிகழ்வில், கோட்டைமுனை விளையாட்டு கழக வீரர்கள் உட்பட ஏனைய விளையாட்டு கழக வீரர்களுமாக சுமார் 30 பேர் கலந்துகொண்டு இரத்த தானம் செய்தனர்.