எமது பிரதேசத்தில் நீண்ட நாட்களாக மழை பெய்யாத காரணத்தினால் எமது பிரதேச விவசாய வயல்கள் , விவசாயிகள் பெரிதும் பாதிப்பு அடைந்துள்ளனர்.
இதனை நிவர்த்தி செய்யவும், மழை பெய்வதற்கும் தம்பிலுவில் கண்ணகை அம்மன் ஆலயத்தில் மழையினை வேண்டி கண்ணகி அம்மனுக்கு மழைக்காவியம் பாடும் நிகழ்வு 27.12.2016 இன்று செவ்வாய்க்கிழமை மாலை 7.00 மணியளவில் தம்பிலுவில் கண்ணகை அம்மன் ஆலய கப்புகனார் திரு.க.தங்கத்துரை அவர்களினால் ஆலயத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
" சோதி மதி பானுகழல் ...........
காதலடியார்கள் பணி ஏற்றருளும் தாயே ..
கட்டாடி கண்ணப்பனடியேனுக் கிறங்கி
மோது குளிர் தாரை மழை நீயருள வேண்டும்
கோகனகர் தம்பிலுவில் வாழும் மாதவே...! ." (உசாத்துணை: விளைநிலம்)
" சோதி மதி பானுகழல் ...........
காதலடியார்கள் பணி ஏற்றருளும் தாயே ..
கட்டாடி கண்ணப்பனடியேனுக் கிறங்கி
மோது குளிர் தாரை மழை நீயருள வேண்டும்
கோகனகர் தம்பிலுவில் வாழும் மாதவே...! ." (உசாத்துணை: விளைநிலம்)
என்று ஆரம்பிக்கும் மழைக்காவிய பாடலினை ஆலய கப்புகனார் பாட ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே குரவை ஒலி முழங்க, குளிர்காற்று வீச மழை தூறல் தொடங்கியது.
இந்தகைய சிறப்பு மிக்க பாடலானது தம்பிலுவில் கண்ணகை அம்மனின் மகிமை பெற்ற 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கட்டாடிக் கண்ணப்பர் பாடிய பாடலாகும். இவ் மழைக்காவியம் பாடியவுடன் மழை பெய்த அற்புதம் அப்போதே இடம்பெற்றுள்ளது. இவர் தம்பிலுவில் கண்ணகை அம்மன் ஆலயத்தில் முன்னாள் பூசகராக இருந்தவராவர்.
இந்நிகழ்வில் ஆலய தலைவர் திரு.கே.சண்முகம்பிள்ளை, மற்றும் ஆலய நிர்வாகசபையினர் மற்றும் பக்த்த அடியார்கள் மற்றும் பலரும் இவ் மழைக்காவியம் பாடும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
காணொளி(Video):-
புகைப்படங்கள் (Photos) :-
இந்தகைய சிறப்பு மிக்க பாடலானது தம்பிலுவில் கண்ணகை அம்மனின் மகிமை பெற்ற 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கட்டாடிக் கண்ணப்பர் பாடிய பாடலாகும். இவ் மழைக்காவியம் பாடியவுடன் மழை பெய்த அற்புதம் அப்போதே இடம்பெற்றுள்ளது. இவர் தம்பிலுவில் கண்ணகை அம்மன் ஆலயத்தில் முன்னாள் பூசகராக இருந்தவராவர்.
(உசாத்துணை : விளைநிலம்)
காணொளி(Video):-
புகைப்படங்கள் (Photos) :-