மட்டக்களப்பு முறகொட்டான்சேனை சேமன் வீதியில் இன்று(2) வியாழன் காலை 11 மணியளவில் திடிரென தீப்பற்றியுள்ளது. வீட்டின் பின் புரத்தில் அமைந்துள்ள குப்பை மேட்டிற்கு தீ வைத்ததால் அதிலிருந்து தீ பரவியிருக்கிறது என வீட்டின் உரிமையாளர் இராமலிங்கம் யோகராஜா தெரிவித்தார்.
சம்பவ நேரத்தில் எனது மனைவி மட்டுமே வீட்டில் இருந்ததாகவும் தீப் பற்றியதைக் கண்டதும் அயலவர்களின் உதவியோடு தீயை கட்டுப்படுத்த முயற்சிசெய்ததாகவும், இருப்பினும் வீடு முற்றாக தீப்பற்றி நாசமாகியுள்ளது தீயினால் வீட்டினுள் இருந்த பணம் மற்றும் பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாகவும் வீட்டின் உரிமையாளர் மேலும் தெரிவித்தார்.












.jpg)


.jpg)
.jpg)
.jpg)


