அரச நிறுவனங்களாக இருந்தாலும் சீல் வையுங்கள் - மட்டு மாவட்ட அபிவிருத்திக்குழு

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு பரவுவதனைக் கட்டுப்படுத்தும் நவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதுடன், டெங்கு பரவலுக்கு ஏதுவான சூழலை வைத்திருக்கும் அரச நிறுவனங்களாக இருந்தாலும் சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், அவற்றிலை சீல் செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதென்று மாவட்ட அபிவிருத்திக்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இன்றைய தினம் (27.3.2017) திங்கட்கிழமை காலை  ஆரம்பமான மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் முதலாவதாக எடுத்துக்கொள்ளப்பட்ட டெங்கு தொடர்பான ஆராய்வில் பிரதேச சபைகள், மாநகர சபை உள்ளிட்ட பிரதேசங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டபோதே  இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



மாவட்ட செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பீ.எஸ்.எம். சார்ள்ஸின் வரவேற்புரையுடன் ஆரம்பமான இன்றைய கூட்டம் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத் தலைவர்களான பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி, நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ;.சிறிநேசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், மாகாண அமைச்சர் கி.துரைராஜசிங்கம், மாகாண சபை பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், ஆர்.துரைரெட்ணம், கே.கருணாகரம், எம்.நடராஜா, சிப்லி பாருக் ஆகியோம் கலந்து கொண்டனர்.

இந்தக்கலந்துரையாடல் தொடர்பில் கலுத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் எம்.எஸ்.அமீர்அலி,

டெங்கு பரவலானது; மிகவும் மோசமாக இருக்கிறது. அதே நேரம், மட்டக்களப்பு மாவட்டத்திலும் அபாயகரமான நிலை ஏற்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான நடவடிக்கைகளை நாம் மிகவும் தீவிரமாகவும் துரிதமாகவும் எடுத்தாக வேண்டும்.

மாகாண சுகாதாரத்திணைக்களம், உள்ளுராட்சி சபைகள், பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களமும் மற்றுமு; அனைவரும் எடுத்தாக வேண்டும். உள்ளுராட்சி நிறுவனங்கள் இது குறித்து  மிகவும் விழிப்பாக இருப்பதுடன் பொது மக்களையுமு; விழிப்படையச் செய் வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அN தநேரம், டெங்கு பரவுவதற்கு ஏதுவான சூழலை வைத்திருக்கும் அரச நிறுவனங்களாக இருந்தாலும் அவற்றுக்கெதிராக நடவடிக்கை எடுப்பதுடன், அவற்றினை மூடுவதற்குரிய நடவடிக்கைகளிலும் ஈடுபடுமாறும் இந்த விடயத்தில் தயவு தாட்சணியம் காட்ட வேண்டாம் என்றும் தெரிவித்தார்.