
'நோயற்ற தேசமொன்றை உருவாக்குவோம்' எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில், மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், உதவி பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு, வவுணதீவு பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.ரி.நஸீர், சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.தமயந்தி உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
இந் நிகழ்வில் கலந்துகொண்ட பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் கருத்துத் தெரிவிக்கையில், இப் பிரதேசத்தில் அன்றாடம் கூலித் தொழில் செய்து உழைக்கும் அதிகமானோர் தாம் உழைக்கும் பணத்தின் ஒரு பகுதியை போதைப் பொருட்களுக்காக செலவிடுகின்றனர்.
இவர்களில் பலர் இன்றும் வறுமையில் இருந்து விடுபடாமல் திண்டாடுகின்றனர். இதனால் இவர்களது பிள்ளைகளின் கல்வி நிலை வெகுவாக பாதிக்கப்படுகின்றது.
இவ்வாறான போதைப்பொருட் பாவனைக்கு அடிமையான பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் எதிர்காலத்தைப்பற்றி சிந்திக்க வேண்டும். பெற்றோர்கள் எதிர்கால சந்ததியை நோய்வாய்ப்பட்டவர்களாக உருவாக்க இடமளிக்காவண்ணம் நற் செயற்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும்.
பணக்காரர்களும் ஏழைகளும் இம் மாவட்டத்தில் போதைப்பொருட் பாவனைக்காக பெருந்தொகை பணத்தினை செலவிடுகின்றனர். இதனால் குடும்ப வறுமைநிலையை போக்க முடியாமல் பலரும் போராடுகின்றனர்.
போதைப்பொருட் பாவனைக்கு அடிமையானவர்கள் இதன் விளைவுகளை தாமாக உணர்ந்து, அதிலிருந்து விடுபட்டு தாமும் தமது குடும்பத்தினரும் எதிர்காலத்தில் நோயற்ற ஆரோக்கியமானதொரு குடும்பங்களிலொன்று என்பதை வெளிப்படுத்த வேண்டும். என தெரிவித்தார்.
இதன்போது விழிப்புணர்வு ஊர்வலம் வவுணதீவு சந்தியிலிருந்து ஆரம்பமாகி பிரதேசசெயலகம்வரை சென்றடைந்தது.
