மட்டு. கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் புதிய வேலைத்திட்டம் ஆரம்ப நிகழ்வு


மட்டக்களப்பில் 45 வருட வரலாறு கொண்ட கோட்டைமுனை விளையாட்டு கழகம் கடந்த 26.06.2017 அன்று தனது மற்றுமொரு வரலாற்று பதிவை மேற் கொண்டுள்ளது.


 அன்றைய தினம் புதிய புற்தரையிலான கிரிக்கெட் மைதானத்தை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு வெகு சிறப்புடன் நடைபெற்றது.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பீ.எஸ்.எம்.சாள்ஸ்  பிரதம அதிதியாக கலந்துகொண்டு வேலைத் திட்டத்தினை ஆரம்பித்து வைத்தார்.


 இந்நிகழ்வில்  மட்டக்களப்பு கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தலைவர் ரஞ்சன் அவர்களும், மட்டக்களப்பு மாநகர சபை முன்னால் ஆணையாளரும் அமைச்சின் செயலாளருமான எம்.உதயகுமார், மட்டக்களப்பு முன்னால் மாகான சபை உறுப்பினர் பி.பிரசாந்தன்  உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.


இதன்போது, கோட்டைமுனை விளையாட்டு கிராமத்திற்கான அங்குரார்பன கல்வெட்டை கோட்டைமுனை விளையாட்டு கழக முன்னால் தலைவர் காசிப்பிள்ளை அவர்களின் தாயார் திருமதி கமலா சண்முகம் திரை நீக்கம் செய்து வைகக்க கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் பெயர் பலகையை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபா திருமதி.பீ.எஸ்.எம்.சாள்ஸ் அவர்கள் திரை நீக்கம் செய்து வைத்தார்.

கட்டிடத்திற்கான அடிக்கற்களை விழாவில் கலந்து கொண்ட விருந்தினர்களுடன் கழக மூத்த உறுப்பினர்களும் புலம் பெயர்ந்து வாழும் கழக வீர்களும் நாட்டிவைத்தனர். இதன் போது மர நடுகையும் இடம் பெற்றது குறிப்பிடத்தக்க விடயமாகும்.