ஏறாவூர் காட்டுமாஞ்சோலை பத்ரகாளி ஆலய தீமிதிப்பு


(கல்லடி -சிவகுமார் )
ஏறாவூர் காட்டுமாஞ்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளி  ஆலய வருடாந்த திருச்சடங்கு 29.06.2017 திகதி அன்று திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி  7  இன்று (09) ஞாயிற்றுக்கிழமை  புனித தீ மிதிப்பு வைபவத்துடன் அன்னையின் சக்தி பெரு விழா நிறைவடைந்தது..
11 நாட்கள் கொண்ட மகா சக்தி பெருவிழாவுக்கு அன்னையின் அருள் வேண்டி மீன் பாடும் தேன்நகரின் பல பாகங்களிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்த அடியார்கள் கலந்து சிறப்பித்தனர்.
ஈழத்து வரலாற்றில் தீ மிதிப்பு என்னும் புனித வைபவம் இந்த பத்ர காளி அம்மன் ஆலயத்தில் தான் முதன் முதல் ஆரம்பமாகியது என்பது தனிச்சிறப்பு .