மட்டக்களப்பு, அமிர்தகழி கிறிஸ்தவ இளைஞர் ஒன்றியத்தின் (CYA) ஏற்பாட்டில் இடம்பெற்ற இரத்ததான நிகழ்வு, அமிர்ககழி புனித கப்பலேந்தி மாதா ஆலய வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை 10ஆம் திகதி நடைபெற்றது.

இளைஞர் ஒன்றியத்தின் தலைவர் இளையதம்பி சிறிராஜேந்திரா தலைமையில் நடைபெற்ற இவ் இரத்ததான ஆரம்ப நிகழ்வில் அமிர்ககழி புனித கப்பலேந்தி மாதா ஆலய பங்குத்தந்தைசீ.வி.அன்னதாஸ் அவர்கள் கலந்துகொண்டு ஆசியுரையினையும் இறை பிராத்தனையினையும் நிகழ்த்தினார்.

அமிர்தகழி கிறிஸ்தவ இளைஞர் ஒன்றியத்தின் சமூகப்பணியாக கடந்த வருடங்களைப்போல் இவ்வருடமும் 'உதிரம் கொடுத்து உயிரைக் காப்போம்' எனும் தொனிப்பொருளுக்கமைவாக இவ் இரத்ததான நிகழ்வு நடைபெற்றது.
இதில் சுமார் 30 பேர் அளவில் கலந்துகொண்டு இரத்ததானங்களை வழங்கினர்.
இதன்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவின் வைத்தியர் என்.சகந்தன், தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார அலுவலக பொது சுகாதார வெளிக்கள உத்தியோகத்தர் வீ.தேவராஜன் போன்றோர் கலந்துகொண்டு இரத்ததானத்தினை பெற்றுக்கொண்டதுடன் இரத்தப் பரிசோதனைகளையும் மேற்கொண்டனர்.