மட்/கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலயத்தின் சர்வதேச சிறுவர் தின, முதியோர் தின நிகழ்வின் 3ஆம் நாள்

[NR]

சர்வதேச சிறுவர் தின, முதியோர் தினத்தைச் சிறப்பிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தின் முன்னெடுப்புடன் கடந்த திங்கள் 02.10.2017 அன்று ஆரம்பிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மூன்றாம் நாள் நிகழ்வு இன்று புதன்கிழமை 04.10.2017 காலை 08.00 மணிக்கு  வித்தியாலயத்தின் அதிபர் திரு. த. அருமைத்துரை அவர்களின் தலைமையில் பாடசாலை முன்றலில் நடைபெற்றது.


இன்றைய நாளில் போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்குவோம் என்கின்ற கருப்பொருளில் விழிப்புணர்வு செயற்றிட்டம் நடைபெற்றது. வளவாளர்களாக கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலயத்தின் பழைய மாணவர்களும் சுகாதார துறைசார் நிபுணர்களுமான வைத்தியர் திரு. ம.  தமணியன் அவர்களும் வைத்திய மாணவர்கள் செல்வி யோ. சதுர்த்திக்கா மற்றும் செல்வி. D. அனிற்றா ஜீன் ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.  நிகழ்வை சிரேஷ்ட ஆசிரியை திருமதி சு. ஞானப்பிரகாசம் அவர்கள் தொகுத்து வழங்கினார்.

போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்குவோம் என்கின்ற தலைப்பில் உரையாற்றிய திரு ம. தமணியன் அவர்கள் போதைப்பொருட்களால் உருவாகும் உடல்நல பிரச்சனைகள், உளநல பிரச்சனைகள், சமுக பிரச்சனைகள் தொடர்பாக தெளிவு படுத்தி பேசினார். போதைப்பொருட்களினால் உருவாகும் வீண் செலவீனங்கள், குடும்ப சச்சரவுகள், பிள்ளைகளின் தேவைகளை நிறைவுசெய்ய முடியாத நிலை போன்ற பாதகமான விளைவுகளை உருவாக்குகின்றது எனவும் மாணவர்கள் மத்தியில் தெளிவுபடுத்தினார்.

போதைப்பொருள் தொடர்பான சாராம்ச உரையை பழைய மாணவர் சங்க செயலாளர் திரு. J. ருஷாந்தன் அவர்கள் வழங்கினார். இறுதியாக பிரதி அதிபர் திரு. க. பாலச்சந்தரன் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.

தொடர்ந்து பழைய மாணவர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களின் உத்வேகமான செயற்பாடுகளில் இவ்வாரத்தில் தொடர்ச்சியாக
அக்டோபர் 6ஆம் திகதி சேமிப்போம் எதிர்காலத்தை கட்டியெழுப்புவோம் என்கின்ற தலைப்பிலும்
அக்டோபர் 9ஆம் திகதி மரம் நடுவோம் சுற்றாடலைப் பேணுவோம் என்கின்ற தலைப்பிலும் பாடசாலை கொடிவாரம் அனுஷ்டிக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.