ஆரையம்பதி பிரதேச வைத்தியசாலையில் மாபெரும் இரத்ததான நிகழ்வு - 2017


"உதிரம் கொடுப்போம் உயிரை காப்போம்" என்ற தொனிப்பொருளுக்கு இணங்க தானங்களில் அதி உன்னதமான தானமாகிய இரத்ததான நிகழ்வு நேற்றையதினம் 28.11.2017 செவ்வாய்கிழமை ஆரையம்பதி பிரதேச வைத்தியசாலையில் வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்நிகழ்வை திறம்பட நடாத்துவதற்கு பிராந்திய சுகாதார பணிப்பாளரின் அனுமதியுடன் இன்றையதினம் ஆரையம்பதி பிரதேச வைத்தியசாலையில் ஆரையம்பதி பிரதேச வைத்திய பொறுப்பதிகாரி டாக்டர்.S.F.அல்மேடா அவர்களின் தலைமையில் மற்றும் வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், வைத்தியசாலை அபிவிருத்திக்குழுவினரும் இணைந்து மட்டக்களப்பு வலய சம்பத் வங்கியின் அனுசரணையுடன் இரத்ததான நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் சுமார் 85ற்கும் மேற்பட்ட கொடையாளிகள் அணிதிரண்டு வருகை தந்து இரத்ததானம் செய்திருந்தனர். இதில் வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பொது சுகாதார பரிசோதக பயிற்சி மாணவர்களும் மட்டக்களப்பு வலய சம்பத் வங்கியின் உத்தியோகத்தர்களும், ஆரையம்பதி மற்றும் காத்தான்குடி நலன் விரும்பிகளும் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.

அதிகரித்துவரும் குருதியின் தேவைப்பாட்டை கருத்திற்கொண்டு ஆரையம்பதி பிரதேச வைத்தியசாலை நிருவாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மனிதாபிமானமிக்க இந்நிகழ்வு வரவேற்கப்பட கூடியதும் தேவைப்பாடு உடையதுமாக காணப்படுகின்றது.

இப்பிரதேச வைத்தியசாலைக்கு சம்பத் வங்கியினால் நோயாளர்களின் நன்மை கருதி சுமார் மூன்றறை 350,000.00 இலட்சம் பெறுமதிமிக்க உபகரணங்களும் (சலவை இயந்திரம், தையல் இயந்திரம், சக்கர நாற்காலிகள், நுளம்பு வலைகள்)  போன்ற அத்தியாவசியமான பொருட்களும் மட்டக்களப்பு வலய சம்பத் வங்கியின் நிருவாகத்தினரால் மாவட்ட வைத்திய அதிகாரியிடம் சம்பிரதாய பூர்வமாக கையளிக்கப்பட்டது முக்கியமான விடயமாகும்.

இதனையொட்டி இவ்இரத்ததான நிகழ்வு சம்பத் வங்கியின் அனுசரணையுடன் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.