(கதிரவன் )
திருகோணமலை ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி 217ம் வருடத்துக்கான பரிசளிப்பு விழா கடந்த சனிக்கிழமை 2017.12.09 காலை நடைபெற்றது. அதிபர் திருமதி சுலோசனா ஜெயாலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் 615 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டது.
கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி பிரதம அதிதியாகவும், யாழ் பல்கலைக்கழக சந்தைப்படுத்தல் பீட தலைவர் எம்.கருணாநிதி கௌரவ விருந்திராகவும், திருகோணமலை வலய கல்வி பணிப்hளர் ந.விஜேந்திரன் விசேட விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தனர். மாணவர்களின் கலை நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டது.



























