மட்டக்களப்பு - கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலயத்தில் மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு - VIDEO

மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலயத்தில் தரம் 1 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு திங்கட்கிழமை 15ஆம் திகதி நடைபெற்றது.
 
பாடசாலை அதிபர் த.அருமைத்துரை தலைமையில் நடைபெற்ற இந் நிகழவில்,  மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சி கலாசாலை அதிபர் ஏ.எஸ்.யோகராசா, கலாசாலை பிரதி அதிபர் வி.பரமேஸ்வரன், ஆசிரியர் ஆலோசகர் திருமதி.ஜே.இந்திரகுமார் உள்ளிட்டோர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.

'மகிழ்ச்சிகரமான ஆரம்பம்" எனும் தொனிப்பொருளுக்கமைவாக தரம் 1 மாணவர்களை தரம் 2 மாணவர்கள் மலர் மாலை அணிவித்து பாடசாலைக்கு வரவேற்றனர்.

இன்றைய தினம் புதிதாக இங்கு வருகைதந்திருக்கும் மாணவச் செல்வங்கள் எதிர்காலத்தில் அவர்கள் வாழும் வீடும் நாடும் போற்றும் வகையில் சிறந்த நற்பிரஜைகளாகவும் கல்விமான்களாகவும் உருவாக்குவதற்கு பெற்றோர்களும் ஆசிரியர்களும் இணைந்து அற்பணிப்புடன் செயற்படவேண்டும். என இதன்போது அதிபர் த.அருமைத்துரை தெரிவித்தார்.

இந் நிகழ்வில் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.