(செ.துஜியந்தன்)பாண்டிருப்பு – கல்முனை எல்லைவீதியில் வீடொன்று தீப்பிடித்து எரிந்ததில் அவ் வீடு முற்றாகச் சேதமடைந்துள்ளது.
கல்முனையைச் சேர்ந்த முன்னாள் சமூகசேவை உத்தியோகஸ்தர் கே.வேதநாயகம் என்பவரின் வீடே தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.
வீட்டில் எவரும் இல்லாத சந்தர்ப்பத்தில் வீடு திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. பக்கத்து வீட்டுக்குச் சென்றிருந்த இல்லத்தரசி வந்து பார்த்தபோது வீடு எரிந்து கொண்டுள்ளது கண்டு கூக்குரலிட்டு உதவிக்கு ஆட்களை அழைத்துள்ளார். அதற்குள் தீ வீடு முழுவதும் பரவத்தொடங்கியுள்ளது. பின் கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு படையினர் ஸ்தலத்திற்கு விரைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
இருந்தபோதிலும் தீயினால் வீடு முற்றாகச் சேதமடைந்துள்ளது. வீட்டில் ஏற்பட்ட மின் ஒழுக்கினால் தீ பரவியிருக்கலாம் என நம்பப்படுகின்றது. மேலதிக விசாரணைகளை கல்முனைப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.









.jpg)


.jpg)
.jpg)
.jpg)


