கல்மடு விவேகானந்தா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி

(ஜெ.ஜெய்ஷிகன்)

கல்குடா வலயத்திற்குட்பட்ட கல்மடு விவேகானந்தா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி அதிபர் சா.பாலச்சந்திரன் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

பிரதம அதிதியாக கோறளைப்பற்றுக் கோட்டக்கல்விப் பணிப்பாளர் நா.குணலிங்கம், கௌரவ அதிதியாக உடற்கல்விக்குப் பொறுப்பான உதவிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.சுபாஸ்சந்திரன், சிறப்பு அதிதியாக கல்மடு கிராம சேவை உத்தியோகத்தர் ஜெ.கிருஸாந், அயற்பாடசாலைகளின் அதிபர்கள், மதத் தலைவர்கள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், பழைய மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மாணவர்களின் உடற்திறன்களை வெளிக் கொணரும் வகையிலான பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது. போட்டிகளில் அதீத திறன்களை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு அதிதிகளால் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத் தக்கது.