அமிர்தகழி புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தில் சிலுவைப்பாதையும் விஷேட வழிபாடும்


(சதீஸ்)
மட்டக்களப்பு - அமிர்தகழி புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தில் பெரிய வெள்ளி தினத்தை முன்னிட்டு சிலுவைப்பாதை நிகழ்வு வெள்ளிக்கிழமை (30ஆம் திகதி) காலை நடைபெற்றது.
அன்றைய தினம் அதிகாலை அன்னையின் ஆலயத்தில் விசேட ஆராதனை வழிபாட்டினையடுத்து சிலுவைப்பாதை நிகழ்வு இடம்பெற்றது. இவ் வழிபாடுகளிலும் திருப்பலியிலும் பெருமளவில் மக்கள் கலந்துகொண்டனர்.