(சுரேஸ் கண்ணா )
இன்று பங்குனி 25, குருத்தோலை ஞாயிறு தினமாகும் ,உலகெங்கிலுமுள்ள கிறிஸ்தவமக்கள் குருத்தோலை ஞாயிறு தினத்தை கொண்டாடுகின்றனர் ,மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் ஜோசெப் பொன்னையா ஆண்டகை தலைமையில் காலை 05.45 மணிக்கு குருத்தோலைகளை ஆசீர்வதிக்கும் பிரதான சடங்கு புளியந்தீவு புனித அந்தோனியார் திருத்தலத்தில் ஆரம்பமாகியது ,
பேராலய பங்கு தந்தை அன்னதாஸ் அடிகளாரும்,துணை பங்கு தந்தை லொயிட் அடிகளாரும் ஆயர் மற்றும் இறைமக்கள் ஆசீர்வதிக்கப்பட்ட குருத்துக்களுடன் ,ஓசான்னா பாடலை இசைத்தவண்ணம் பவனியாக புனித மரியாள் பேராலயத்தை சென்றடைந்ததும் ,தொடர்ந்து ஆயர் தலைமையில் திருப்பலி வழிபாடுகள் நடைபெற்றது.குருத்தோலை ஞாயிறு தின வழிபாடுகளை பேராலய மறையாசிரியர்களும் ,மறைக்கல்வி மாணவர்களும் ஒன்றிணைந்து நெறிப்படுத்தியிருந்தார்கள் .குருத்தோலை ஞாயிறு தின ஆரம்பத்துடன் கிறிஸ்தவமக்கள் புனித வாரத்தினுள் காலடி எடுத்து வைக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும் .
