தாழங்குடா சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழா


தாழங்குடா ஸீப்ரா விளையாடுக் கழகம் முன்நின்று நடத்திய சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழா 29.04.2018 ஞாயிற்றுக்கிழமை கழகத் தலைவர் நிரஞ்சன் தலைமையில் நடைபெற்றது.

மரதன், வழுக்குமரம் ஏறுதல், நீல முட்டி உடைத்தல், தலையணைச் சமர், மாவூதிக் காசெடுத்தல், கிடுகிளைத்தல், காலில் வலூன் கட்டி உடைத்தல், மாறு வேடப் போட்டி, முதியோருக்கான ஓட்டம், தேங்காய் துருவுதல், கம்பம் சுற்றுதல், கயிறுழுத்தல், கண் கட்டி நீர் நிரப்புதல் போன்ற பல விளையாட்டுக்கள் நடத்தப்பட்டன.

ஸீப்ரா விளையாடுக் கழகத்தால் வாழ்நாள் சாதனையாளராக சிவஸ்ரீ வ.வல்லிபுரம் (ஆலய பூசகர், நாட்டு விசவைத்தியர், சமாதான நீதிவான், ஜோதிடர் ) அவர்கள் கௌரவிக்கப்பட்டார்.

இந் நிகழ்வில் சமாதான நீதிவான், மண்முனைபற்று பிரதேச சபை உறுப்பினர் ஆ.சிவலிங்கம்,சமாதான நீதிவான் மா.காசிப்பிளை, சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மா.நமசிவாயம், க. கமலநாதன், ஆசிரியர் பி. மகேந்திரன், க.தேவராஜ், சிறைச்சாலை உத்தியோகத்தர் வ.கமல், வீரமா காளியம்மன் ஆலயத் தலைவர் ந.துவாகரன், மற்றும் அழைப்பு அதிதி' கமல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

போட்டிகளில் பங்கு பற்றியவர்களுக்கு பெறுமதி வாய்ந்த பரிசுகள் வழங்கப்பட்டது.