புனித மரியாள் சர்வதேச பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப்போட்டி
(வ.சுரேஸ் கண்ணா)
மட்டக்களப்பு புளியந்தீவு மற்றும் பூம்புகார் பகுதிகளில் இயங்கி வரும் புனித மரியாள் சர்வதேச பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப்போட்டி (6 )பாட்டாளிகள் புர விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகி நடைபெற்றது .அதிதிகளை மாலை அணிவித்து வரும் பிரதான நிகழ்வுடன் பிற்பகல் 02.30 மணியளவில் விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.
கல்லூரி முதல்வர் திருமதி பிரான்சிஸ் அவர்கள் தலைமை தாங்கிய இவ்விளையாட்டு நிகழ்வில் மட்டக்களப்பு எஹெட் கரித்தாஸ் நிறுவன இயக்குனர் அருட் பணி அலெக்ஸ் ரொபேர்ட் அடிகளார் பிரதம அதிதியாகவும், புனித மரியாள் பேராலய பங்கு தந்தை கிளமென்ட் அன்னதாஸ் அடிகளார் சிறப்பு அதிதியாகவும், அருட் சகோதரர் அலோசியஸ் விஷேட அதிதியாகவும் கலந்து கொண்டு சிறார்களுக்கு சான்றிதல்களை வழங்கி வைத்தனர் .