வவுணதீவில் நடைபெற்ற புதுவருடச் சந்தை

கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு வவுணதீவு பிரதேச செயலகத்தில் பலகாரச் சந்தை நடைபெற்றது.

நேற்று (11) இடம்பெற்ற இந்த பலகாரச் சந்தையில் பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்ட பலகாரவகைகள், முறுக்கு வகைகள், தட்டை வடை, அரியதரம் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் காட்சிக்காகவும் விற்பனைக்காகவும் வைக்கப்பட்டிருந்தன.

கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் யோ.தனுசியாவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், நிருவாக உத்தியோகத்தர் ஜெ.ஜெயந்திரன், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் ரி.சத்தியசீலன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.