மேலும் பண்டிகைக் காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படும் எனவும் அதன் காரணமாக அதிவேக நெடுஞ்சாலைகளின் போக்குவரத்து சட்டதிட்டங்களை உரிய முறையில் பேணுவதற்கான நடவடிக்கைகள் வலுப்படத்தப்படவுள்ளதாகவும் போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
நெடுஞ்சாலைகளில் பணிக்கும் வாகனங்களின் வேகம் 100 மீற்றரை விட அதிகரிக்கக் கூடாது எனவும் மணித்தியாலத்திற்கு 60 கிலோ மீற்றரை விட குறைவாக பயணிக்கும் வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளுக்குள் அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு – கோட்டையிலிருந்து தூதரப்பிரதேசங்களுக்கு செல்லும் பயணிகளுக்காக இந்த விசேட தொடரூந்து சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, புது வருடத்தை முன்னிட்டு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நேற்று முதல் விசேட பேருந்து சேவைகளை நேற்று முதல் ஆரம்ம்பித்துள்ளது.
கொழும்பிலிருந்து பல்வேறு பிரதேசங்களுக்கும் 3 ஆயிரத்து 500 பேருந்து சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தாலைவர் எம்.ஜீ.ஏ. ஹேமச்சந்ர தெரிவித்துள்ளார்.
இதேநேரம், இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கதினரும், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் விசேட தொடரூந்து சேவைகளை ஆரம்பிக்க உள்ளது. அதிவேக நெடுஞ்சாலைகளை இலக்காகக் கொண்டு இந்த பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்பட உள்ளாத தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
மேல் மாகாண வீதி போக்குவரத்து அதிகார சபையுடன் இணைந்து இந்தப் பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





.jpg)


.jpg)
.jpg)
.jpg)


