மட்டு தமிழ் இளைஞர்களின் தமிழ் சிங்கள புதுவருடக் கொண்டாட்டம்


தமிழ் சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு கலை கலாசார நிகழ்வுகள் 28.04.2018 ஆம் திகதி சனிக்கிழமை அன்று காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மாநகர சபை சிறுவர் விளையாட்டு மைதானத்தில் (கல்லடிப் பாலத்திற்கு அருகாமையில்) நடத்தப்படவுள்ளது.

மட்டக்களப்பு தமிழ் இளைஞர்கள் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந் நிகழ்வில் பாரம்மபரிய கலை நிகழ்வுகளான மாட்டு வண்டி ஓட்டம், மயில் நடனம், உறியடி, கபடி, குறவஞ்சி, விளையாட்டுக்கள் மற்றும் பாரம்பரிய நடன நிகழ்வுகள் என மொத்தம் 32 வகையான நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.