
தாந்தாமலை ஸ்ரீமுருகன் ஆலய பரிபாலன சபையின் ஏற்பாட்டில் மண்முனை தென்மேற்குப் பிரதேச சபையின் புதிய தவிசாளர், பிரதித் தவிசாளர் உட்பட சபை உறுப்பினர்களுக்கான விசேட பூசை வழிபாடு மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மண்முனை தென்மேற்குப் பிரதேச சபையின் தவிசாளர் சி.புஸ்பலிங்கம், உதவித் தவிசாளர் பொ.கோபாலப்பிள்ளை மற்றும் பிரதேச சபையின் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்
இதன்போது பூசை வழிபாடுகள் இடம்பெற்றதுடன், அதன் பின்னர்ஆலய மண்டபத்தில் ஆலய நிர்வாகத்தினர் பிரதேச பொதுமக்கள் ஆகியோருடன் பிரதேச அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
