ஆரையம்பதி மண்முனைப்பற்று பிரதேசசபைத் தவிசாளர் பதவியேற்பு


மட்டக்களப்பு,  ஆரையம்பதி மண்முனைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் உத்தியோகபூர்வமாக நேற்று பதவியேற்றனர். ஆரையம்பதி பிரதேசபையின் செயலாளர் கிருஸ்ணமூர்த்தி மற்றும் உத்தியோகத்தர்கள் முன்னிலையில் தவிசாளர் எஸ்.மகேந்திரலிங்கம் உட்பட ஏனைய உறுப்பினர்கள் நேற்று (11) தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து தவிசாளர் ஆரையம்பதியிலுள்ள சுவாமி விவேகானந்தரின் சிலைக்கு மலர் மாலை அணிவித்தார். குறித்த நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் உட்பட கட்சி முக்கியஸ்தர்கள் ,மண்முனைப்பற்று பிரதேசசபையின் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

மண்முனைப்பற்று பிரதேசசபையின் தவிசாளராக சுயேட்சைக்குழுவில் போட்டியிட்டு எஸ்.மகேந்திரலிங்கம் தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.