இதன்படி நாளை முதல் நூற்றுக்கு 6.56 வீதமாக பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது.
எனினும் தற்போது காணப்படும் குறைந்தபட்ச கட்டணத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது என அமைச்சர் ரஞ்சித்த மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
இதேவேளை எரிபொருள் விலை அதிகரிப்புடன் 20 சதவீத பேருந்து கட்டண அதிகரிப்பை எதிர்பார்ப்பதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சம்மேளனத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் முன்னதாக கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.