குப்பை மற்றும் கழிவுகள் கொட்டும் இடத்தினை வாழைச்சேனை தவிசாளர் ஸோபா ஜெயரஞ்சித் நேரில் சென்று பார்வை.


குப்பை மற்றும் கழிவுகள் கொட்டும் இடத்தினை வாழைச்சேனை தவிசாளர் ஸோபா ஜெயரஞ்சித் நேரில் சென்று பார்வையிட்டார்.
கொழும்பு பிரதான நெடுஞ்சாலைக்கு அண்மையில் உள்ள சூடுபத்தினசேனையில் கோறளைப்பற்று வாழைச்சேனை, மற்றும் ஓட்டமாவடி பிரதேசசபைக்குட்பட்ட கழிவுகள் கொட்டும் இடத்தினை வாழைச்சேனை பிரதெசவபை தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் நேரில் சென்று பார்வையிட்டார். 
கோறளைப்பற்று வாழைச்சேனை,மற்றும் ஓட்டமாவடி எனும் இரு பிரதேச சபைக்குட்பட்ட கழிவுகள் இங்கு கொட்டப்படுகின்றன.
குப்பைகனை சீராக்கல் மற்றும் ஒதுக்கல் எரித்தல் தொடர்பாக இரு பிரதேசசபைகளும் செயல்படுகின்றன. 
திண்மக்கழிவு முகாமைத்துவநிலையம் ஒன்றும் உள்ளது அதன் இயங்கு நிலை குறைவாகவே காணப்படுகிறது. முகாமைத்துவ அடிப்படையில் சேதனப்பசளையும் தயாரிக்கப்படுகின்றது.
முன்று ஏக்கர் பரப்பளவில் கழிவுகள் கொட்டப்படுகின்றன.
அண்மித்த பகுதியில் குடியிருப்புக்கள் உள்ளன.வயற்காணிகள் உள்ளன.
மாலை நேரத்தில் யானைகளின் வருகை உள்ளதுடன் நாய்களின் மற்றும் கட்டாக்கலி மாடுகளின்  தொல்லையும் அதிகம் அப்பிரதேசத்தில் அதிபரிப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர். 
இதே வேளை அங்குள்ள குறைகளை கண்டறிந்து சீர் செய்யும் நோக்குடன் தவிசாளர் நேரல் சென்று பார்வையிட்டார். 







இப் பிரச்சினை தொடர்பாக கடந்த  பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களிலும் பேசப்பட்டடமை குறிப்பிடத்தக்கதாகும்.