இன்றையதினம் 18 அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துக் கொண்டனர்.
லக்ஷ்மன் கிரியல்ல பொது தொழில்முயற்சி, கண்டி அபிவிருத்தி அமைச்சராக பதவியேற்றார்.
விஞ்ஞான, தொழில்நுட்ப, ஆய்வுகள், திறன் அபிவிருத்தி, தொழிற்பயிற்சி, மலைநாட்டு பாரம்பரிய அமைச்சராக சரத் அமுனுகம பதவியேற்றுக் கொண்டார்.
மகிந்த அமரவீர, விவசாய அமைச்சராகவும், எஸ்.பி.நாவின்ன உள்துறை விவகாரம், வடமேல் அபிவிருத்தி அமைச்சராகவும் பதவி ஏற்றுக் கொண்டனர்.
விவசாய அமைச்சராக இருந்த துமிந்த திஸாநாயக்க நீர்பாசன மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
சமுக அபிவிருத்தி அமைச்சராக பி. ஹரிசனும், பெருந்தெருக்கள், வீதி அபிவிருத்தி அமைச்சராக கபீர் ஹசீமும் பதவியேற்றனர்.
ரஞ்சத் மத்தும பண்டார, பொது நிவர்காம், முகாமைத்துவம், சட்ட ஒழுங்குகள் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
தளதா அத்துகோரல, நீதி, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சராகவும், விளையாட்டுத்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சராக ஃபைசர் முஸ்தபா பதவியேற்றுக் கொண்டனர்.
சட்ட ஒழுங்குகள் அமைச்சராக இருந்து சாகல ரத்நாயக்க, செயல்திட்ட முகாமைத்துவம், இளைஞர் விவகாரம் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார்.
புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம், இந்துவிவகார அமைச்சராக டி.எம்.சுவாமிநாதன் பதவியேற்றதுடன், அவரிடம் இருந்த சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சுப் பொறுப்பு மாற்றப்பட்டு, புதிதாக வடக்கு அபிவிருத்தி அமைச்சுப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சர் மனோகணேசன் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச மொழிகள் அமைச்சராக மீண்டும் பதவியேற்றுக் கொண்டார்.
சமூக நலன், ஆரம்ப கைத்தொழில் அமைச்சராக தயா கமகேவும், சரத் பொன்சேகா, பேண்தகு அபிவிருத்தி, வனவளத்துறை மற்றும் பிராந்திய அமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்டனர்.
ரவீந்திர சமரவீர, தொழில், தொழிற்சங்க உறவுகள் அமைச்சராகவும், விஜயதாஸ ராஜபக்ஷ உயர்கல்வி, கலாசார அமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்டார்கள்.