இதன் ஆன்மீக அதிதியாக சிவஸ்ரீ கோ.கு. கிரிதரக் குருக்கள், முதன்மை அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ச. வியாழேந்திரன், மண்முனைப் பிரதேச சபை தவிசாளர் சோ.மகேந்திரலிங்கம்,
புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் கி.தினேஸ்குமார், புதுக்குடியிருப்பு வடக்கு கிராம சேவகர் அ.கேதாரப்பிள்ளை, புதுக்குடியிருப்பு தெற்கு கிராம சேவகர் செ.டிலக்சன், பொறியியலாளர் யோ.தவநேசன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இதன் முக்கிய நிகழ்வாக புதுக்குடியிருப்பு பொது விளையாட்டு மைதானத்துக்கான சுடர் விளையாட்டுக் கழகத்தினரால் முன்னின்று அமைக்கப்பட்ட வியாழேந்திரன் அரங்கு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டு மைதான விளையாட்டுக்கள் அனைத்தும் ஆரம்பமாகின
மரதன், மிட்டாய் ஓட்டம், சறுக்கு மரம் ஏறுதல், தோணி ஓட்டம், சைக்கிள் ஓட்டம், நிறப்பானை உடைத்தல், ஸ்ரோ கொருத்தல், இலக்கு ஓட்டம், கயிறிழுத்தல், கிடுகு பின்னுதல், பலூன் பஸ், போத்தலில் நீர் நிரப்புதல், வினோத உடைப் போட்டி, அஞ்சலோட்டம்,
தேங்காய் துருவுதல், அயலூர் கழகங்களுக்கிடையிலான போட்டி, மர்ம மனிதரைக் கண்டுபிடித்தல் மற்றும் உத்தியோகத்தர்களுக்கிடையிலான போட்டி எனப் பல விளையாட்டுக்கள் இடம்பெற்றன.
விளையாட்டுக்களில் பங்கு பற்றி வெற்றி ஈட்டியவர்களுக்கு பெறுமதி வாய்ந்த பொருட் பரிசுகளும், பணப் பரிசுகளும் வழங்கப்பட்டதுடன், ஆறுதல் பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
இறுதியாக சுடர் விழையாட்டுக் கழகத்தின் செயலாளர் அ. திவாகரன் அவர்களது நன்றி உரையுடன் நிகழ்வுகள் இனிது நிறைவடந்தது.



