இதேவேளை கொழும்பிலுள்ள பிரதான தபால் நிலையம் மற்றும் பிராந்திய தபால் நிலையங்களில் 15 இலட்சத்திற்கும் அதிகமான தபால்கள் தேங்கிக்கிடப்பதாகவும் ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சின்தக்க பண்டார குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் தபால் ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு கொடுப்பதாக தெரிவிக்கப்பட்ட பின்னரும் இவ்வாறு தபால் ஊழியர்கள் தொடர்ந்தும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமை நியாயமற்ற விடயம் என தபால் அமைச்சர் அப்துல் ஹலீம் கூறியுள்ளார்.