தமது தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஏனைய தொழிற்சங்கத்தினரின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்காக இன்று பிற்பகல் தொழிற்சங்கத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அதன் ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.
அஞ்சல் திணைக்களத்திற்கான தனியான ஆட்சேர்ப்பு முறையை நடைமுறைப்படுத்தல், உள்ளிட்ட சில கோரிக்கைகளுக்கு தீர்வைப் பெற்றுத்தருமாறு கோரி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அஞ்சல் பணியாளர்கள் கடந்த தினம் கொழும்பில் எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு பெற்றுக்கொடுக்கப்படாவிட்டால், தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுப்பதாக அஞ்சல் தொழிற்சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.