அனைத்துப்பொதுமக்கள், பிரதேசசபை தவிசாளர்கள், மாநகரசபை முதல்வர்கள், அனைத்து ஆலய பரிபாலனசபையினர், விளையாட்டுக்கழகத்தினர், புத்திஜீவிகள், நலன்விரும்பிகள், மதப்பெரியார்கள் யாவருக்கும் அன்பின்பணிவு.
எமது ஸ்ரீபரமநயினார் (ஆரையம்பதி) பேராலயத்தில் தேர்த்திருவிழா 20.06.2018 அன்று நடைபெற்றது. தேர்த்திருவிழாவானது வீதியால் செல்வதன் காரணமாக மக்களின் காலை வெயில் சுட்டுவிடும் என்பதற்காக அதன்முன்னோடி நடவடிக்கையாக 22.05.2018 அன்று எமது பேராலயப் பொருளாளரினால் ஆரையம்பதி பிரதேசசபைத் தவிசாளருக்கு நேரடியாக கடிதம் நீர்வண்டிகளை குறித்த தேர்த்திருவிழாதினமன்று தந்துதவுமாறு கொடுக்கப்பட்டதுடன் விளக்கமும் அளிக்கப்பட்ட்து..
அவரே அதனைப் பெற்றுக் கொண்டார் .ஆனால் தேர்த்திருவிழா தினத்திற்கு முன்தினமான 19.06.2018 அன்று எமது பேராலயப் பொருளாளர் ஆரையம்பதி (மண்முனைப்பற்று) பிரதேசசபைத் தவிசாளரை தண்ணீர்ப்பிரச்சினையை (நீர்வண்டி) உறுதிப்படுத்துவதற்காக சென்றபோது பணம்செலுத்தினால் மட்டுமே தண்ணீர் தரமுடியும் என திட்டவட்டமாக கூறினார்.
கடிதம் கொடுத்து ஏறக்குறைய ஒருமாதமாகியும் இவ்விடயத்தை (பணம்கட்டவேண்டும் என்பதை) எமக்குதெரியப்படுத்தவில்லை. பொறுப்பான பணிகளில் இருப்பவர்கள் இப்படி அலட்சியமாக நடந்துகொள்வதாவது எம்மக்களால் ஜீரணிக்கமுடியாமல் இருக்கின்றது. தேர்தல் என்று வந்து விட்டால் எம்மக்களைச் சுற்றிவரும் பிரதேசசபைத் தவிசாளர் மக்களின் பிரச்சினைக்கு இவ்வாறு ஏனோதானோ என்று பதிலளித்தது ஏற்கமுடியாததே..
இவ்வாறு தவிசாளர் தன்னிச்சையாக முடிவெடுப்பதன் காரணமாக ஏனைய உறுப்பினர்களுக்கும் ஆரையம்பதி பிரதேசசபைக்கும் கெட்டபெயரே உருவாகின்றது. சென்ற ஆண்டு நடைபெற்ற தேர்த்திருவிழாவின் போது அப்போதிருந்த செயலாளர் எமக்கு நீர்வண்டிகளை இலவசமாகவும் தாராளமாகத் தந்தது மட்டுமல்லாமல் பல உதவிகளும் செய்தார். ஆனால் இன்று மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களால் ஆட்சிசெய்யப்படும் ஆரையம்பதி பிரதேசசபையானது மக்களின் மனதைப் புரியாமல் தன்னிச்சையாக நடைபோடுகின்றது. இவ்விடத்தில் மக்களின் வரிப்பணமே பிரதேசசபைகளை உயர்த்தி நிற்கின்றது என்றால் மக்களுக்காக பிரதேசசபையா? அல்லது பிரதேசசபையின் நாற்காலிகளை அலங்கரிக்க தவிசாளரா? என்ற கேள்வி எம்மக்கள் மத்தியில் ஊசலாடுகின்றது. எம் மண்முனைப்பற்று பிரதேசசபையில் அதியுச்ச இவர்களின் நாடகக்காலம் நான்கு வருடங்கள் மட்டுமே என்பதை இவர்கள் மறந்து விட்டார்கள் போலும். எடுத்ததற்கெல்லாம் தவிசாளர் தனக்கு அதிகாரம் உள்ளது என்று கூறுகின்றார் . அவ்வாறெனில் மக்களின் நிலை?
இவ்வாறு பணத்திற்காக தான் தண்ணீர் தருவேன் என்ற பிரதேசசபை தவிசாளரின் வீராப்புப் பேச்சின் பின் எம் சகோதர இனமான காத்தான்குடி நகரசபையினைத் தொடர்பு கொண்ட போது எவ்வித மறுப்பும் இல்லாமல் அவர்கள் நீர்வண்டியை தந்துதவினார்கள். இவ்வாறே பண்டாரியாவெளி நாகக்கட்;டில் உற்சவம் நடந்த போதும் ஆரையம்பதி பிரதேசசபை தவிசாளரின் திமிரான முடிவால் கொக்கட்டிச்சோலை பிரதேசசபையினர் அவர்களின் தண்ணீர் வண்டியைத் தந்தனர். அதனையடுத்து கௌரவ மாநகரசபை முதல்வர் திரு. தி. சரவணபவானைத் தொடர்பு கொண்ட போது அவரும் எவ்வித மறுப்புமின்றி தண்ணீர் வண்டியைத் தந்துதவினார். அத்துடன் திரு. ச. சந்திரகுமார் என்னும் அடியவரும் தனது தண்ணீர் வண்டி வாகனத்தைத் தந்துதவினார்.
இலங்கையில் கதிர்காமம், மாமாங்கம், மாத்தளை, யாழ்ப்பாணம், களுதாவளை போன்ற இடங்களில் அங்குள்ள பிரதேசசபையினரும் மாநகரசபையினரும் இலவசமாகத் தண்ணீர் விநியோகம் செய்யும் போது ஆரையம்பதி பிரதேசசபையின் தவிசாளர் ஆலயங்களுக்கு தண்ணீர் விற்று சாதித்தது?
ஆனால் இவ்விடயத்தை கூர்ந்து நோக்கினால் இது அவரின் நாகரீகமற்ற நடவடிக்கை என்றே ஏனைய உத்தியோகத்தர்களும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மற்றும் தெரிவு செய்யப்படாத, உறுப்பினர்களும் தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு மாநகரசபை, காத்தான்குடி நகரசபை, கொக்கட்டிச்சோலை பிரதேசசபை போன்றவற்றால் தண்ணீர் வண்டியை தரமுடியுமென்றால் ஏன் ஆரையம்பதி பிரதேசசபைக்கு தன் மண்ணிலே நடக்கும் தேர்த்திருவிழாவிற்கு தண்ணீர் வண்டியைத் தர முடியாது?

ஆனால் இன்று ஆரையம்பதி பிரதேசசபைத் தவிசாளர் தங்கட்கு எமது பேராலய பரிபாலன சபையினால் கடிதம் தரப்படவில்லை என பல்டி அவர் சார்பான மக்களிடம் அடிக்கின்றாராம்.இவ்விடயத்தில் (கடிதம்) சம்பந்தப்பட்ட எமது பேராலயப் பொருளாளரிடம் நீங்கள் தொடர்பு கொண்டால் உண்மை புரியும். (அவரின்இலக்கம் 0777140650)
இவ்வாறு மாறி மாறிக் கதைக்கும் ஆரையம்பதி பிரதேசசபைத் தவிசாளர் நாளை தான் தண்ணீருக்கு காசு கட்டச் சொல்லவில்லையே என்றும் கூறலாம் என்பதற்காகவே ஆரையம்பதி பிரதேசசபையினரிடமிருந்து ரூ. 4,000/= செலுத்தி இரு தண்ணீர் வண்டிகளைப் பெற்றுக்கொண்டோம். அதற்கான பற்றுச் சீட்டும் எமது பரிபாலன சபையால் பிரதேசசபைக்கு கொடுக்கப்பட்ட கடிதமும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
பிரதேசசபைச் சட்டத்தின் கீழ் தண்ணீர் ஆலயங்களுக்கு விற்கத்தான் வேண்டும் என்றால் அதை மக்களுக்கு தெரியப்படுத்தாதது ஆரையம்பதி பிரதேசசபையின் மாபெரும் தவறாகும்.
இவ்வேளையில் காத்தான்குடி நகரசபை, மட்டக்களப்பு மாநகரசபை, கொக்கட்டிச்சோலை பிரதேசசபை ஆகியோருக்கும் திரு.ச சந்திரகுமார் அவர்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றிகளைச் சமர்ப்பிப்பதுடன் இத் தண்ணீர்ப் பிரச்சினையை உங்கள் கருத்துக்களுக்காகவும் நீங்கள் கேட்டதற்காகவும் சமர்ப்பிக்கின்றோம்.

எல்லாப் பிரதேச சபைகளும் நகர மற்றும் மாநகர சபைகளும் மக்கள் நலனில் அக்கறை செலுத்துவதன் காரணமாக வீதிக்கு மின் விளக்கு பொருத்துதல், பாதையைச் செப்பனிடுதல் உட்பட பல மக்களுக்கான நலத்திட்டங்களைச் செய்கின்றன. ஆனால் ஆரையம்பதி பிரதேச சபை சாதித்த சாதனைகளாவன ஆலய நிருவாகங்கள். விளையாட்டுக் கழகங்கள் போன்றவர்களுடன் பிரச்சினை.,தனிப்படட பழிவாங்கல்.
எனவே இனி வரும் காலங்களிலாவது நடந்த தவறைத் திருத்திக் கொண்டு ஆலயங்கள், தேவாலயங்கள் , பள்ளிவாசல்கள் , பொது அமைப்புகள், விகாரைகள் போன்றவற்றிற்கு இலவசமாக தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுப்பதுடன் மக்களுக்கு நன்மை பயக்கும் செயல்களைச் செய்ய வேண்டும்.என்பது எமது மக்கள் சார்பாக பரிபாலன சபையினரின் தாழ்மையான வேண்டுகோள்.

நன்றி
என்றும்
இறைபணியில்
பரிபாலனசபை,
ஸ்ரீ பரமநயினார் (ஐயனார்) பேராலயம்,
ஆரையம்பதி-01,
ஆரையம்பதி.