மட்டக்களப்பில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளுடன் துவிச்சக்கர வண்டி மோதியதிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. துவிச்சக்கர வண்டியில் பயணித்த புதுக்குடியிருப்பு மில்லடி வீதியைச் சேர்ந்த செல்வராசா (வயது 70) என்பவர் பலத்த காயங்களுடன் மயக்கமுற்ற நிலையில் ஆரையம்பதி மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞருக்கு முகத்தில் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணையை காத்தான்குடி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.