
(வரதன்)
ஜனாதிபதியின் வேண்டுகோளின் பெயரில் கிழக்குக்கு விஜயம் செய்துள்ளதாகவும் விரைவில் ஜனாதிபதி மட்டக்களப்புக்கு கிராம சக்தி அபிவிருத்தி திட்டத்தை ஆரம்பிக்க விஜயம் செய்யவுள்ள தாகவும் கிழக்கு மாகாணத்தில் அதிகமாகவுள்ள விவசாய பிரச்சினைகளை தீர்ப்பதற்காக தமது விஜயம் அமைந்ததாகவும் யுத்தத்தால் பாதிப்புற்ற விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப ஜனாதிபதி விருப்பம் கொண்டுள்ளதாகவும்; விவசாயிகளின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவதோடு தமது அமைச்சின் கீழ் பணிபுரியும் ஊழியர்களின் தேவைகளை கண்டறிவதற்காகவே விஜயம் செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.
பிரதி விவசாய அமைச்சர் அங்கஜன் இராமநாதன் முதன்முறையாக மட்டக்களப்புக்கு விஜயத்தை மேற்கொண்டார். நண்பகல் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் இடம்பெற்ற புஜை வழிபாட்டில் இறையாசி வேண்டி கலந்துகொண்டதோடு ஆலய வரலாற்றையும் கேட்டறிந்து பார்வையிட்டார். அமைச்சர் மக்களுடனும் கலந்துரையாடி. அதன் பின்பு ஊடகங்களுக்கு தமது விஜயம் பற்றி கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார். அவரது அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட விவசாயிகள் சமேளன பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.