காரைதீவு பிரதேச சபையில் நீண்டகாலமாக அமைய அடிப்படையில் வேலைசெய்யும் ஊழியர்கள் தங்கள் நியமனத்தினை நிரந்தர நியமனமாக்குமாறு கோரிக்கை விடுத்து கவனயீர்ப்பு போராட்டமொன்றினை இன்று முன்னெடுத்தனர்....
குறித்த நிகழ்வு காரைதீவு பிரதேசசபையின் நுழைவாயிலில் இடம்பெற்றதுடன் இதில் அமைய அடிப்படையில் கடமையாற்றும் ஊழியர்கள் , உபதவிசாளர் , பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் தவிசாளர் சமூகசேவையாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.....
குறித்த நிகழ்வில் கலந்துகொண்ட உபதவிசாளர் கருத்து தெரிவிக்கையில் " ஊழியர்கள் கோரிக்கை நியாயமானது இது தொடர்பினில் ஜனாதிபதி மற்றும் ஆளுனரின் கவத்திற்கு கொண்டுவரவுள்ளதாக தெரிவித்தார்....
மேலும் சபைத் தவிசாளர் குறிப்பிட்ட விடயம்தொடர்பினில் ஆளுனரினை சந்திக்க திருகோணமலை சென்றுள்ளதாக பிரதேச சபையின் செயலாளர் தெரிவித்ததுடன் ஊழியர்களால் வழங்கப்பட்ட மகஜர் ஒன்றினையும் பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்தார்.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4