கல்குடாவில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மகளிர் பிரிவு அங்குரார்ப்பணம்


(ரீ.எல்.ஜவ்பர்கான்)
ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைவருமான மைத்திரிபால் சிறிசேனவின் வழிகாட்டலில் மட்டக்களப்பு மாவட்ட்த்தில் ஸ்ரீலங்கா சுந்திர கட்சியின் மகளிர் பிரிவுகள் அங்குரார்ப்பணம் செய்யப்பட்படு வருகின்றன.

இத்திட்டத்தின்கீழ் கல்குடா தொகுதியில் மகளிர் பிரிவு அங்குரார்ப்பணம் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் கல்குடா தொகுதி பிரதான அமைப்பாளரும்; வாகரை பிரதேச சபையின் பிரதி தவிசாளருமான டி.டிம்.சந்திரபாலன் தலைமையில் நேற்றுநடைபெற்றது. இதில் கல்குடா தொகுதி மகளிர் அமைப்பிற்கான பொது கூட்டமும், சித்தாண்டி -03 கிளைக் காரியாலய அங்குரார்ப்பணமும் நடைபெற்றது.

இதன் போது மகளிர் அணி தலைவி எஸ்.மீனதர்சினி, மகளிர் அணி செயலாளர் கே.கிருஷா, கட்சியின் கொடுவாமடு கிளைத்தலைவரும் கல்குடா தொகுதி மத்திய குழு உப செயலாளருமான நற்குணம், சித்தாண்டி கிளைத் தலைவர் சுரேஷ், மற்றும் கட்சியின் ஏனைய முக்கியஸ்தர்கள், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.