மட்டக்களப்பு கோப்பாவெளி பிரதேசத்தில் காட்டுயானை தாக்கி பரிதாப கரமாக உயிர்நீத்த இளைஞரின் சடலம் பிரேதப்பரிசோதனை நடாத்தப் பட்டு உறவினரிடம்நேற்று 15 மாலை செங்கலடி வைத்திய சாலையில் வைத்து ஒப்படைக்கப்பட்டது.
கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்டகோப்பா வெளி காட்டுப் பிரதேசத் தில் காட்டுயானை தாக்கியதில் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் ஸ்தலத்தில் பரிதாபகரமாக உயிர் நீத்த தாக பொலிஸ் வட்டா ரத்தகவல் தெரிவிக்கின்றது
இச்சம்பவம் பெரியபுல்லுமலை இலுப்பையடி பள்ளம்காட்டுபகுதியில் இடம்பெற்றுள்ளது. கோப்பாவெளி குறுக்குவீதியில் வசித்த ஞானப்பிரகாசம் சகாயநாதன் என்ற இளைஞரே இவ்விதம் பரிதாப கரமாக உயிர்நீத்துள்ளார்.
குறித்த இளைஞர் வழமைபோல தமது வளர்ப்பு ஆடுகளுக்கு அருந்தக் கொடுக்க சுமார் ஏழுமணியளவில் பசும்பால்வாங்க ஒருமைல் தூரத்திலுள்ள மாட்டுப்பண்ணைக்குச் செல்லும்போது காட்டுப்பகுதியில் மறைந்து இருந்த காட்டுயானை கொடூரமாகத் தாக்கி உயிரைப் பறித்திருப்பதாக மரணவிசாரணையில் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம்பற்றி மட்டக்களப்பு நீதி வான் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ .எம் .ரிஸ்வியின் பணிப்பில் ஏறாவூர் பற்று திடீர் மரண விசாரணை அதிகாரி எம். எஸ்.எம் .நசீர் ஸ்தலத்துக்குவந்து விசாரணைகளை மேற்கொண்டார் .மரணவிசாரணைஅதிகாரியின் அனுமதியில் இச்சடலம் பற்றிய பிரேதப் பரிசோதனை சட்ட வைத்திய அதிகாரிமான டாக்டர் கே.எம்.சுகுமாரினால் நடாத்தப்பட்டது.
இதேவேளைகுறித்தகாட்டு யானைதாக்குதலுக்குள்ளான இளைஞரின் குடும்பத்தை வனஜீவராசிகள் அமைச்சர் சரத் பொன்சேகாவின் இணைப்பாளரும் ஐக்கிய தேசியக்கட்சியின் இணைப்பாளருமான வேலுப்பிள்ளை மகேஸ்வரன் ஏறாவூர்பற்றுபிரதேசைசபை ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர் திருமதி நல்லரத்தினம் அமுதினி சகிதம் நேரில்சென்று சந்தித்து ஆறுதல் கூறினார்.
சம்பவம் நடைபெற்ற பகுதிகளை நேரில் பார்வையிட்டு எடுக்கவேண்டிய அவசர நடவடிக்கைகள் பற்றியும் வனஜீவராசிகள்திணைக்கள அதிகாரி களுக்கு பணிப்புரை விடுத்ததுடன் அவசர நஷ்ட ஈடு மற்றும் மரணச்சடங் குக்கு வேண்டிய உதவிகளையும் பெற்றுக்கொடுத்தார்.

















.jpg)


.jpg)
.jpg)
.jpg)


