மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் மட்டக்களப்பு அமிர்தகழி தூய கப்பலேந்தி அன்னை ஆலய மறை கல்வி பாடசாலையின் வருடாந்த ஒளிவிழா நிகழ்வுகள் ஆலய பங்கு தந்தை அருட்பணி ரட்ணக் குமார் தலைமையில் மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது
அமிர்தகழி தூய கப்பலேந்தி அன்னை ஆலய மறை கல்வி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற வருடாந்த ஒளிவிழா நிகழ்வில் சிறார்களினதும் மறை ஆசிரியர்களின் கலாசார நடன நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் நிகழ்வில் கலந்துகொண்ட மறைக்கல்வி பாடசாலை சிறார்களுக்கு அதிதிகளினால் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன
இந்நிகழ்வில் அதிதிகளாக அருட் தந்தை எலக்ஸ் ரொபட் சிவில் பாதுகாப்பு பொலிஸ் உத்தியோகத்தர் அன்புராஜ் மற்றும் மறைக்கோட்ட மறைக்கல்வி பாடசாலை ஆசிரியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .
இன்று நடைபெற்ற அமிர்தகழி தூய கப்பலேந்தி அன்னை ஆலய மறை கல்வி பாடசாலையின் வருடாந்த ஒளிவிழா நிகழ்வில் பாடசாலை சிறார்கள் மற்றும் சிறார்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்

