கல்குடாவில் ஆலயக்கதவு உடைத்து கொள்ளை!



மு.கோகிலன்

மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள மருதநகர் சிவமுத்துமாரியம்மன் ஆலயத்தின் வாயில் கதவு உடைக்கப்பட்டு உற்சவத்திற்க்கு பயன்படுத்தும் பெறுமதி வாய்ந்த பொருட்கள் சிலவற்றினை இனம் தெரியாதோரால் திருடிச் செல்லப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்;.

இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை (15) இடம்பெற்றுள்ளதாகவும் குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் கல்குடா பொலிசார் மேலும் தெரிவித்தனர்.