நமக்கு வாழ்க்கையில் பிரச்சினைகள் வரும் போது மிகவும் மனமுடைந்து போகிறோம். எல்லாம் கைவிட்டு போனது போல் தோன்றும். அடுத்த அடி எங்கே எப்படி எடுத்து வைப்பது என்று தெரியாது. மனஅழுத்தம் அதிகமாகும். கத்தி அழ வேண்டும் போல் இருக்கும்.
இப்படி ஒரு நிலை நம் எல்லோர் வாழ்விலும் உண்டு.
அதை நாம் கடந்து வர தான் வேண்டும். மனஅழுத்தத்தில் இருக்கும் போது எந்த ஒரு முடிவுகளையும் எடுக்காதீர்கள்.
அமைதியாக இருங்கள். நிதானமாக செயற்படுங்கள். தனிமையான இடத்தில் இருந்து கவலைகள் வெளிவரும் வரை அழுது விடுங்கள். அதன் பிறகு சிந்தித்து பாருங்கள் உங்கள் கஷ்டத்திற்கான தீர்வு உங்களுக்கு தெரியும். அடுத்த அடி எடுத்து வைப்பதற்கான பாதை எது என்று தெரியும்.
இப்படி ஒரு கஷ்டத்தில் ஏன் விழுந்தோம் என்று நிதானமாக சிந்தித்து பாருங்கள் அப்போது தெரியும் நாம் எங்கே என்ன தவறு செய்தோம் என்று.
அதை நீங்கள் உணரும் போது நிச்சயமாக ஒரு பாடத்தை கற்றுக்கொள்வீர்கள். அந்த பாடம் அடுத்து நீங்கள் வாழ்க்கையில் செய்யும் முயற்ச்சிக்கு வழி வகுக்கும்.
கஷ்டங்களும் மனஅழுத்தமும் அதிகமாக இருக்கும் போது யார் மீதும் நம்பிக்கை வைப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் உண்மையான மனிதர்களை அடையாளம் காணும் மனநிலையில் நீங்கள் இல்லை.
உங்களுடைய முடிவுகளில் மாத்திரம் உறுதியாக இருங்கள். உங்களது எண்ணங்களில் நம்பிக்கை வையுங்கள்.
எப்பொழுதும் நம்மை சுற்றி இருப்பவர்கள் நமது செயல்களில் உள்ள பாதகமான விளைவுகளை பற்றி மட்டுமே பேசுவார்கள். ஆனால் உங்கள் செயல்களில் உள்ள சாதகமான விளைவுகள் என்ன என்பது உங்களுக்கு தெரியும் ஆகவே நீங்கள் தேர்ந்தெடுத்த பாதையில் தயங்காமல் முன்னேறுங்கள்.
-சகி-

.jpg)