
(லியோன்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்களுள் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு புளியந்தீவு ஆனைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் தேவஸ்தான வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தோற்சவம் அடியார்கள் புடை சூழ கோலாகலமாக நடைபெற்றது .
காலை ஆலய பிரதம குரு வேதாகம பிரதிஷ்டா பூசனம் சிவஸ்ரீ நடராஜ சந்திரலிங்கக் குருக்கள்தலைமையில்விநாயர் வழிபாடுகளுடன் உற்சவகால விசேட யாக பூசை மற்றும் அபிசேக பூஜை,வசந்த மண்டப பூஜை நடைபெற்று ஆலய மஹோற்சவத்தின் தீர்த்தோற்சவம் கோலாகலமாக நடைபெற்றது .
கடந்த 10 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான தேவஸ்தான வருடாந்த மகோற்சவம் தீர்த்தோற்சவம் அடியார்கள் புடை சூழ வேத,நாத,மேளங்களுடன் அடியார்களின் ஆரோகரா கோசங்களுடன் கோலாகலமாக மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய தீர்த்த குளத்தில் நடைபெற்றது .
மாலை ஆலயத்தில் நடைபெறவுள்ள உற்சவகால கிரியைகளுடன் ஆலய மகோற்சவ பெருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவு பெற்றமை குறிப்பிடத்தக்கது







