ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டுவதில் பயனில்லை ; ரணில் விக்கிரமசிங்க



அரசியல் பேசவேண்டும் என்பதற்காக, ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டிக்கொண்டு, இந்நாட்டு இளைஞர் - யுவதிகளுக்கான எதிர்காலத்தை உருவாக்க முடியாதென்று தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அவ்வாறான அரசியல்வாதிகள், அரசியலில் இருப்பதிலும் பலனில்லை என்றார்.

முத்துராஜவெல - அலகந்த வீதியில், இலங்கைப் பெற்றோலிக் கூட்டுத்தாபனத்தினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மசகு எண்ணெய்க் கலவை இயந்திரத்தைத் திறந்துவைக்கும் நிகழ்வு, பிரதமர் தலைமையில் நேற்று (24) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், சரியானதைச் செய்யும்போது, ஏனையவர்களிடம் பேச்சு வாங்கிக்கொள்வது பரவாயில்லை என்றும் ஆனால், தாங்கள் செய்யும் வேலை, சரியாகச் செய்யப்பட வேண்டுமென்றும் கூறினார்.

எவ்வாறாயினும், இந்நாட்டு இளைஞர் - யுவதிகளுக்கான சிறந்த எதிர்காலமொன்றையே தான் எதிர்பார்ப்பதாகவும் அதைப் பெற்றுக்கொடுப்பது, அரசாங்கத்தின் கடமையென்றும் கூறினார்.