இலங்கை வங்கியின் எண்பதாவது ஆண்டினை முன்னிட்டு வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி இலங்கை வங்கி கிளையின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு வாழைச்சேனை இலங்கை வங்கி கிளையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வாழைச்சேனை இலங்கை வங்கி கிளையின் முகாமையாளர் கே.ஜெகதீஸ்பரன் தலைமையில் நடைபெற்ற இரத்ததான நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் ஏ.பிரதீபன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
மேலும் அதிதிகளாக வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களாக எம்.அஸ்மி, எஸ்.கபூர், ஓட்டமாவடி இலங்கை வங்கி கிளையின் முகாமையாளர் ஆர்.பிரேமச்சந்திரன் மற்றும் வங்கி ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், வாழைச்சேனை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் என நாற்பதுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களுடைய குருதி நன்கொடையினை வழங்கி வைத்தனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவின் ஏற்பாட்டில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கி வைத்திய அதிகாரி செ.விருஷகவி மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவில் இரத்தம் பற்றாக்குறையாக காணப்படும் நிலையில் இதனை ஓரளவேனும் தீர்த்து வைக்கும் வகையில் வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி இலங்கை வங்கி கிளையின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு நடாத்தப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் ஏ.பிரதீபன் தெரிவித்தார்.




.jpg)


.jpg)
.jpg)
.jpg)


