ஆர்.சயனொளிபவன் & TEAM
இன்று வரை ஜனாதிபதி தேர்தல் களத்தில்
ஐக்கிய தேசிய கட்சிக்குள் வலுக்கும் முரண்பாடு..
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ச...
ஐ தே கட்சியின் உப தலைவர் சஜித் பிரேமதாச..
வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் சமூகத்தை பொறுத்த அளவில்
...
எமது நாட்டில் நடைபெறவிருக்கும் ஏழாவது ஜனாதிபதி தேர்தலுக்கான காலப்பகுதி நெருங்குகின்ற வேளையில் நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் மற்றும் ஊடகங்களின் பார்வையும் இத் தேர்தலை நோக்கியதாக நகர தொடங்கியுள்ளது . நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி எமது நாட்டின் எதிர்வரும் ஐந்து வருட காலத்தின் தலை விதியை தீர்மானிக்கும் தலைவராகவும் இருப்பார் என்பதனால் இத் தேர்தல் நாட்டில் இடம்பெறும் மற்றைய தேர்தல்களை விட மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.
ஜனாதிபதி தேர்தல் களத்தில்
இம்முறை நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தல் வரும் டிசம்பர் மாதத்தில் நடைபெற உள்ள வேளையில் இதுவரை இத் தேர்தலில் போட்டியிட முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ச அவர்களை பொதுஜன பெரமுன (தாமரைமொட்டு) கட்சியும், JVP கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரா குமார திசாநாயக்க அவர்களை JVP யும் களமிறக்கிய நிலையில் , ஐக்கிய தேசிய முன்னணியில் உள்ள கட்சிகளை பொறுத்தளவில் , ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச தன்னை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்துள்ள இத் தருணத்தில் மேலும் ஒரு வேட்பாளரை இம் முன்னணி களமிறக்குமா என்ற சூழ்நிலையில் வருகின்ற ஜனாதிபதி தேர்தல் சூடுபிடிக்க துவங்கியுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சிக்குள் வலுக்கும் முரண்பாடு
ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவரும் அமைச்சருமான சஜீத் பிரேமதாச தாம் தான் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் என்று அறிவித்த நிலையில் மேலும் அக்கட்சிக்குள் பெரும் மோதல்கள் ஏற்பட தொடங்கிய நிலையில் குறிப்பாக அவ் முன்னணியில் உள்ள முக்கிய கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தமது கட்சி சார்பாக இத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் என இருந்த இவ் வேளையிலேயே அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்கள் தாமே வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதாக தெளிவாக கூறியதுடன் நின்றுவிடாது இரு பிரமாண்டமான மக்கள் வெள்ளம் நிரம்பிய கூட்டங்களை பதுளையிலும் மற்றும் மாத்தறையிலும் நடாத்திய நிலையில் தன்னை மூன்றாவது ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ளார். மேலும் இவர் எக் கட்சியின் சார்பில் போட்டியிடுவார் என்று தெரியாத நிலையில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் அவர்களுடைய தோழமை கட்சிகள் இணைந்து மேலும் ஒரு வேட்பாளரை களமிறக்குவார்களா என்ற கேள்விக்கு வருகின்ற வாரங்கள் வரை பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும் .
எவை எவ்வாறு இருப்பினும் நான்கு வேட்பாளர்கள் களமிறங்கும் பட்சத்திலும் போட்டி அமைச்சர் சஜித் பிரேமதாசாவிற்கும் முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கும் இடையே தான் இருக்கும் என தற்போதைய கள நிலவரங்களின் படி ஊகிக்கமுடிகின்றது .
இதுவரை மூன்று வேட்பாளர்கள் களமிறங்கி இருக்கின்ற வேளையில் கோத்தபாயா ராஜபக்ச பலவீனமான வேட்பாளராகவும். ஐக்கிய தேசிய கட்சியால் அல்லது ஐக்கிய தேசிய முன்னணியால் மேலும் ஒருவர் களமிறங்கும் பட்சத்தில் அது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவோ அல்லது சபாநாயகர் கரு ஜெயசூரிய அல்லது வேறு ஒரு பிரபல்யமானவராகவோ இருக்கும் பட்சத்தில் அம் முயற்சியானது அமைச்சர் சஜித் பிரேமதாசாவின் நிலையை பலவீனப்படுத்துமே தவிற வேறு ஒன்றையும் சாதிக்கப்போவதில்லை என்பதும் தெளிவாக தென்படுகின்றது
இதுவரை மூன்று வேட்பாளர்கள் களமிறங்கி இருக்கின்ற வேளையில் கோத்தபாயா ராஜபக்ச பலவீனமான வேட்பாளராகவும். ஐக்கிய தேசிய கட்சியால் அல்லது ஐக்கிய தேசிய முன்னணியால் மேலும் ஒருவர் களமிறங்கும் பட்சத்தில் அது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவோ அல்லது சபாநாயகர் கரு ஜெயசூரிய அல்லது வேறு ஒரு பிரபல்யமானவராகவோ இருக்கும் பட்சத்தில் அம் முயற்சியானது அமைச்சர் சஜித் பிரேமதாசாவின் நிலையை பலவீனப்படுத்துமே தவிற வேறு ஒன்றையும் சாதிக்கப்போவதில்லை என்பதும் தெளிவாக தென்படுகின்றது
கோட்டபாய ராஜபக்ச
முன்னாள் பாதுகாப்பு செயலாளரான கோட்டபாய ராஜபக்ச 20 ஜூன் 1949 இல் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் பிறந்த இவர் 1971 இல் இராணுவத்தில் இணைந்து 1992வரை பணியாற்றினார். தனது ஓய்வு காலம் முடியும் முன்னரே 20 வருடங்கள் இராணுவத்தில் சேவை செய்தவர் என்ற ரீதியில் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற உடன் அமெரிக்கா பிரஜாவுரிமை பெற்று அங்கு சென்று குடியேறி 13 வருடங்கள் வாழ்ந்துள்ளார் . பின்னர் 2005இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தனது சகோதரர்களில் ஒருவரான மஹிந்த ராஜபக்ச அவர்களின் வெற்றியை தொடர்ந்து, மீண்டும் நாட்டிற்கு வந்தது மட்டுமல்லாது அவரது சகோதரர் ஜனாதிபதி மஹிந்தராஜபக்சவால் பாதுகாப்பு செயலாளராகவும் நியமிக்கப்பட்டார் மேலும் இவர் 2005இல் இருந்து 2015வரை பாதுகாப்பு செயலராக கடமையாற்றினார். என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் 2009ஆம் ஆண்டு தமிழ் ஈழ விடுதலை புலிகளுக்கு எதிரான போரை முடிவிற்கு கொண்டு வந்தார்.
இவர்
- விடுதலை புலிகளினூடான இறுதி யுத்தத்தில் ஏற்பட்ட மனித பேரழிவு, மற்றும் வெள்ளைக்கொடி விவகாரம், காணாமல் ஆக்கப்பட்டமை போன்ற பலகுற்ற சாட்டுக்களில் இவர் முக்கிய காரணி என்பதனை பல வெளிநாட்டு தன்னார்வ நிறுவனங்களும் மற்றும் உள் நாட்டு தன்னார்வ நிறுவனங்களும் கூறிவருவதோடு மட்டும் நின்றுவிடாது இவருக்கு எதிராக போர் குற்ற விசாரணை நடத்தப்படவேண்டும் என்று பல வகையில் சட்ட நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் இன்றுவரை தொடர்கின்றனர்
- கடும் சிங்கள போக்கு தன்மையை கொண்டது மட்டுமல்லாது சிங்கள அடிப்படைவாதிகளான பொதுபலசேனா இயக்கம் மற்றும் ஞானசாரதேரர் போன்றோருடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டவர் ,
- 2010 - 2015 வரையிலான காலப்பகுதியில் முஸ்லீம் மக்களுக்கு எதிராக கடும் போக்கு தன்மையை கொண்டு இயங்கியவர். இதனால் சிங்கள முஸ்லீம் மக்களுக்கிடையே முறுகல் நிலையை தோற்றுவிப்பதற்கான காரண கருத்தாகவும் இருந்தவர் என்றும் கருதப்படுகின்றார்.
- ஒரு இராணுவ தன்மையான முறையில் நாட்டை முன்னெடுத்து செல்லக்கூடிய ஒருவர் என்றும் இவர் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டால் ஒரு உறுதியான தலைமைத்துவதுடன் பாதுகாப்பு அச்சமற்ற நேர்மையான நாட்டை உருவாக்குவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம் காணப்படுகின்றது என்றும் இவர் தரப்பால் கூறப்படுகின்றது .
- இவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் நாட்டில் மனித உரிமை ஊடகத்துறை மற்றும் பொதுவாகவே நாட்டின் ஜனநாயகத்திற்கு சவாலாகவும் அமையலாம் என்றும் பரவலாக கருதப்படுகின்றது
சஜித் பிரேமதாச
அமைச்சர் சஜித் பிரேமதாச 12 ஜனவரி 1967ஆம் ஆண்டு பிறந்த இவர் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச அவர்களின் புதல்வருமாவார் இவர் தன்னுடைய தந்தையை போல் அடிமட்டத்தில் உள்ள மக்களின் உயர்ச்சிக்காக உழைக்கும் ஒரு அரசியல்வாதியுமாவார்
இவர்
- 2000 ஆம் ஆண்டு தனது அரசியல் பயணத்தை அம்பாந்தோட்டை மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதிலிருந்து ஆரம்பித்து பின்னர் பிரதி அமைச்சர், அமைச்சர், கட்சியின் உப தலைவர் என படிப்படியாக உயர்ச்சி நிலையை அடைந்துள்ளார்
- பாராளுமன்ற அரசியலில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்து தெரிவுசெய்யப்பட்டதில் இருந்து இவருக்கு வழங்கப்படும் தனிப்பட்ட வாக்குகளின் வீதம் அதிகரித்து கொண்டே சென்றுள்ளது கடந்த தேர்தலில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய முன்னணிக்கு வழங்கப்பட்ட மொத்த வாக்குகளில் 90% அளவிலான வாக்குகள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கவொரு விடயமாகும்
- நகர்புரத்தில் இருந்து சாதாரண மக்களை நாடளாவிய ரீதியில் தேடிச்செல்லும் ஒரு அரசியல் வாதியாக கருதப்படும் இவர் மற்றைய அமைச்சர்களுடன் ஒப்பிட்டுபார்க்கும் போது இவரே கிராமப்புறங்களுக்கு அதிகளவிலான பயணங்களை மேற்கொண்ட அமைச்சராகவும் திகழ்கின்றார்
- சாதாரண மக்களுடன் எளிமையாகவும் பயனுள்ள முறையிலும் தனது நேரத்தை செலவிடும் அரசியல்வாதி என மக்கள் மத்தியில் தென்படுகின்றார்
- இவர் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டால் தற்போது எவ்வாறு தனது அமைச்சை திறம்பட நடத்திச்செல்கின்றாரோ அதே போல் நாட்டையும் நடத்தி செல்வதோடு மட்டுமல்லாது மேலும் நாட்டில் உள்ள சகல மக்களின் நாடித்துடிப்பையும் நன்கு அறிந்துள்ள ஒருவராகவும் கருதப்படுவதனால் கூடியளவிற்கு சகல மக்களையும் இன, மத , வகுப்பு வேறுபாடின்றி வழி நடத்தி செல்லக்கூடிய தன்மையையும் கொண்டவர் என்றும் கருதப்படுகின்றார் .
வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் சமூகத்தை பொறுத்த அளவில்
வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களை பொறுத்தளவில் காலகாலமாக ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குபவர்களை நம்பி ஏமாந்த கதையாகவே அமைந்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளில் ஜனாதிபதி சந்திரிகாவின் 1994ஆம் ஆண்டு முதலாவது ஜனாதிபதி தேர்தல் மற்றும் ஜனாதிபதி மைத்திரியின் 2015ஆம் ஆண்டு தேர்தல் இவை இரண்டும் குறிப்பிடத்தக்க தேர்தல்களாகும் . . இவர்களை நம்பி தமிழ் மக்கள் பெருமளவில் வாக்களித்தது ஒன்றுதான் மிகுதி ஆனால் இவர்களிடம் இருந்து தமிழ் மக்கள் பிரதியுபகாரமாக பெற்றது ஒன்றுமே இல்லை. மேலும் இம்முறையும் ஜனாதிபதி தேர்தல் களத்தில் இறங்கியுள்ள வேட்பாளர்களால் தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் விதத்தில் பாரிய அளவில் ஒன்றையும் வழங்கப்போவதில்லை என்பதும் நன்குதெரிந்த ஒரு விடயமுமாகும்.
முன்னாள் ஜனாதிபதிகளில் ஜனாதிபதி சந்திரிகாவின் 1994ஆம் ஆண்டு முதலாவது ஜனாதிபதி தேர்தல் மற்றும் ஜனாதிபதி மைத்திரியின் 2015ஆம் ஆண்டு தேர்தல் இவை இரண்டும் குறிப்பிடத்தக்க தேர்தல்களாகும் . . இவர்களை நம்பி தமிழ் மக்கள் பெருமளவில் வாக்களித்தது ஒன்றுதான் மிகுதி ஆனால் இவர்களிடம் இருந்து தமிழ் மக்கள் பிரதியுபகாரமாக பெற்றது ஒன்றுமே இல்லை. மேலும் இம்முறையும் ஜனாதிபதி தேர்தல் களத்தில் இறங்கியுள்ள வேட்பாளர்களால் தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் விதத்தில் பாரிய அளவில் ஒன்றையும் வழங்கப்போவதில்லை என்பதும் நன்குதெரிந்த ஒரு விடயமுமாகும்.
ஆனால்
அமைச்சர் சஜீத் பிரேமதாசாவை பொறுத்த அளவில் அவர் ஜனாதிபதியானால்
- ஜனநாயகத்திற்கு பெரும் மதிப்பளிப்பவராகவும் மற்றும் சகல இன மக்களையும் மனிதத்தன்மையுடன் பார்ப்பவராகவும் இருப்பதனாலும் தன்னுடைய தந்தையை வன்முறையின் மூலம் இழந்தும் அவரின் வீடமைப்பு அமைச்சின் ஊடாக தமிழ் மக்கள் என்ற பாகுபாடு இன்றி வீடுகள் அற்றவர்களுக்கு தமது அமைச்சின் ஊடாக வீடுகள் வழங்கும் போது நாட்டில் உள்ள மற்றைய பகுதிகளுக்கு நேரே சென்று வீடுகளை கையளிப்பது போன்று வடக்கு கிழக்கு என்று வரும் போதும் அப்பகுதிகளிற்கும் தாமே நேரே சென்று வீடுகளை கையளிப்பதையும் கடந்த நான்கு வருடம் காலமாக காணக்கூடியதாக உள்ளது
- வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் தலைமைகளுடனும் சேர்ந்து போகக்கூடிய தன்மை இவரிடம் இருப்பதனால் வடக்கு கிழக்கில் உள்ள மக்களின் தேவைகளை அக்கட்சிகளின் ஊடாக பூர்த்திசெய்யக்கூடிய தன்மையையும் எதிர்பார்க்கபடுகின்றது
- எதிர்காலத்தில் சிறுபான்மை கட்சிகளை முறையற்ற முறையில் பிரிக்கும் முயற்சிகளில் ஈடுபடமாட்டார் என்ற நம்பிக்கையும் பொதுவாக காணப்படுகின்றது
- மேலும் முன்னாள் ஆயுத குழுக்களில் இருந்து அரசியலிற்கு வந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடன் இருந்தவர்களுக்கு இவருடைய ஆட்சியில் பெருமளவு ஆதிக்கம் செலுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் குறைவாகவே காணப்படுகின்றது.
- இவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் தமிழ் மக்களை பொறுத்தளவில் அரசியல் தீர்வு கிடைக்கின்றதோ இல்லையோ கூடிய அளவு நிம்மதியுடனும் மற்றும் பாதுகாப்பு கெடுபிடிகள் அற்றநிலையிலும் மேலும் வடக்கு கிழக்கு உரிய அபிவிருத்தி முயற்சிகள் என வருகின்ற போது ஒரு பொதுக்கட்டமைப்பினுடாக இடம்பெறுவதற்கான சந்தர்ப்பங்களே கூடுதலாக காணப்படுகின்றது.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ச ஜனாதிபதியானால்
- தமிழ் மக்கள் சுதந்திரமானதும் நிம்மதியானதுமான வாழ்க்கையை தொடரமுடியுமா என்பது கேள்விக்குறியாகவே அமையலாம்
- இவர் ஜனாதிபதியானால் வடக்கு கிழக்கில் உள்ள மாற்று அரசியல் தலைமைகளான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் , கிழக்கில் பிள்ளையான் அவர்கள் , கருணா அவர்கள் மற்றும் இனியபாரதி போன்றோரின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்று கருதப்படுகின்றது
- தமிழ் தேசிய கட்சிகளை பலவீனப்படுத்தும் முயற்சிகளும் பரவலாக மேற்கொள்ளப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாக காணப்படும்
- அதேவேளை கோட்டபாய ராஜபக்ச கூறுவதுபோல் பெருமளவு இளைஞர்கள் மற்றும் யுவதிகளின் மனதில் இடம்பெறக்கூடியவகையில் கூடிய அளவு வேலைவாய்ப்பை தரக்கூடிய அபிவிருத்தி முயற்சிகள் இடம்பெறலாம். அதாவது தமிழ் தேசிய கட்சிகளால் சாதிக்கமுடியாத ஒரு விடயத்தை தாங்கள் மேற்கொண்டுள்ளோம் என்பதை நிரூபித்து தமது செல்வாக்கை வருங்காலங்களில் வடக்கு கிழக்கு பகுதிகளில் நிலைநாட்ட முயற்சிக்கலாம்.
வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களை பொறுத்தளவில் அவர்களின் வாக்குவங்கி 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் மற்றும் 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல்களில் ஜனாதிபதிகளை தெரிவுசெய்யும் சக்தியாக திகழ்ந்துள்ளது . இவ் இரு தேர்தல்களிலும் இரு முன்னணி போட்டியாளர்களுக்கும் இடையே உள்ள வாக்கு வித்தியாசம் 5 இலட்சத்திற்கும் குறைவாகவே இருந்தது. அதேபோல் இம்முறையும் குறிப்பாக ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஜனாதிபதி வேட்பாளர் சம்பந்தமாக ஏற்பட்டுள்ள முரண்பாடு காரணமாக ஜனாதிபதி தேர்தலில் முடிவுசெய்யும் சக்தியாக தமிழ் மக்களின் வாக்குவங்கி திகழலாம். தமிழ் மக்களை பொறுத்த அளவில் இத் தேர்தலின் மூலம் பெரும் எதிர்பார்ப்புகள் அற்ற தன்மையே காணப்படுகின்றது. ஆனால் அவர்களை பொறுத்த அளவில் ஒரு பாதுகாப்பானதும் மற்றும் நிம்மதியானதுமான ஒரு வாழ்கை முறையை இத் தேர்தலின் மூலம் உறுதிப்படுத்தகூடியதுமான ஒரே ஒரு அம்சமே தெளிவாக தென்படுகின்றது . மேலும் தமிழ் மக்களின் வாக்களிப்பும் அதனை நோக்கியதாகவும் அமையலாம்.
ஆர்.சயனொளிபவன் & TEAM
ஆர்.சயனொளிபவன் & TEAM







.jpg)







.jpg)
.jpg)