சித்தாண்டி யோகர் சுவாமி மகளிர் இல்லத்தில் இடம்பெற்ற விவேகானந்தரின் நினைவுப் பேருரை நிகழ்வு



இந்த உலகையே இந்தியா மற்றும் கீழைத்தேச நாடுகளின் பக்கம் திரும்ப வைத்து வரலாறு படைத்தவர் சுவாமி விவேகானந்தர். அவர் சிகாகோ சர்வமத மாநாட்டில் ஆற்றிய பேருரை இந்து மதத்தின் பெருமையை மேற்கத்திய உலகிற்கு உணர்த்;தியது. அத்துடன் இன்றைய அண்மைக்கால மதவெறிச் செயல்களைப் பார்க்கும் போது  இந்த உரையின் முக்கியத்துவம் பற்றி சொல்ல வேண்டிய அவசியமில்லை.

09.11 என்றாலே அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் மீது நடாத்தப்பட்ட பயங்கரவாதத்தையே நினைக்கும் மக்கள், அதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே அதே திகதியில் மதநல்லிணக்கத்தின் ஆணிவேரை சுட்டிக்காட்டிய சுவாமி விவேகானந்தரை நினைத்துப்பார்க்க வேண்டும்.

11.09.2019 அன்று சித்தாண்டி யோகர் சுவாமி மகளிர் இல்லத்தில் சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் ஆற்றிய பேருரையின் 126வது ஆண்டு விழா நிகழ்வுகள் இனிதே நடைபெற்றது. இல்ல மாணவிகளின் பண்னிசை, பேச்சு மற்றும் சுவாமி விவேகானந்தரின் சிகாகோ பேருரை காட்சியைக்கொண்ட 20 நிமிட திரைப்படமும் காட்சிப்படுத்தப்பட்டது.

சுவாமி விவேகானந்தரை நேரடியாகச் சந்தித்து அந்த ஆன்மிகத் தாக்கத்தில் வந்தவர் யோகர் சுவாமிகள். யோகர் சுவாமிகளின் சீடர் சுவாமிகளால் அமைக்கப்பட்டது சித்தாண்டியில் உள்ள யோகர் சுவாமிகள் மகளிர் இல்லம் என்பது குறிப்பிடத்தக்கது.